Home /News /employment /

மயிலாடுதுறை தொழில் மையத்தில் ஓட்டுநர் பதவி - விண்ணப்பிப்பது எப்படி?

மயிலாடுதுறை தொழில் மையத்தில் ஓட்டுநர் பதவி - விண்ணப்பிப்பது எப்படி?

ஓட்டுநர் வேலை

ஓட்டுநர் வேலை

TN Government job 2022 | தமிழ்நாடு அரசில் ஓட்டுநர் பதவிக்கு ஒரே ஒரு பதவி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டம் தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2022. இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் 30.06.2022 அன்று பிற்பகல் 05.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

    கொரோனா பெருந்தோற்று காரணமாக அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 13.09.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

    மேலும் கல்வித்தகுதி 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் மற்றும் ஒட்டுநர் பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2-வது தளம், செந்தில் பைப் வளாகம், கச்சேரி சாலை. மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்று சான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின் ஒளி நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/06/2022061027.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://mayiladuthurai.nic.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி