மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : 1
விண்ணப்பங்கள் 30.06.2022 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: 12ம் வகுப்புக்குப் பிறகு, என்ன படிக்கலாம்? மாணவர்களை ஈர்க்கும் துறைகள் யவை?
கொரோனா பெருந்தோற்று காரணமாகக் அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, 13.09.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனயுகளை யெக்குவதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: பொறியியல் கலந்தாய்வு: நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
மேற்காணும் தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம். 2-வது தளம். செந்தில் பைப் மயிலாடுதுறை - 609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்று சான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், முன் அனுபவ சான்றிதழ்களின் ஒளி நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும், குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.