ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

Central Govt job alert : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் டிபிடேசன் முறையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிர்வாகம் மற்றும் சட்டப்பிரிவுகளில் அனுபவம் மிக்க நபர்களை டிபிடேசன் முறையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகளுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். நிர்வாகம் மற்றும் சட்டப்பிரிவில் 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்காலியிடம்சம்பளம்வயது வரம்பு
Deputy General Manager (Legal)2ரூ.78,800-2,09,20056
Manager (Administration)12ரூ.67,700-2,08,70056
Manager (Legal)2ரூ.67,700-2,08,70056
Assistant Manager (Legal)4ரூ.47,600-1,51,10056

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி தகுதி
Deputy General Manager (Legal)சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 9 ஆண்டுகள் அனுபவம்.
Manager (Administration)ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம்.
Manager (Legal)சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம்.
Assistant Manager (Legal)சட்டப்பிரிவில் டிகிரி மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் https://nhai.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://nhai.gov.in/#/vacancies/current

Also Read : கோவில்களில் அறங்காவலர் பணி... அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : Deputy General Manager (Legal) பதவிக்கு 15.02.2023. இதர பதவிகளுக்கு 19.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs