மத்திய அரசின் ஜவுளி துறையின் கீழ் செயல்படும் குடிசைத் தொழில்கள் கழகம் நாட்டின் கைவினைப் பொருட்களை வியாபாரம் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | வயது | சம்பளம் | இடம் |
Dy.Manager(Sales/Marketing) | 35 வயது வரை | ரூ.60,000/- | ஹைதராபாத் |
Dy.Manager(Interior Decoration Services) | 35 வயது வரை | ரூ.60,000/- | டெல்லி |
Dy.Manager(Finance) | 35 வயது வரை | ரூ.60,000/- | டெல்லி |
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
பதவி | கல்வித்தகுதி |
Dy.Manager(Sales/Marketing) | பட்டப்படிப்பு மற்றும் MBA அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விற்பனை பிரிவில் 5 வருடம் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. |
Dy.Manager(Interior Decoration Services) | B.Arch/B.Voc/M.Voc (Interior Design) அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். Interior Design பிரிவில் 8 வருட அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. |
Dy.Manager(Finance) | வணிகத்தில் CA/ICWA/MBA முடித்திருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த நிறுவனத்தில் பதவிக்கு ஏற்ற தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.cottageemporium.in/
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
AGM(HR/Admin),Central Cottage Industries Corporation of India Ltd., Jawahar Vyapar Bhawan,Janpath,New Delhi-110001.
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 19.12.2022.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs