ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்

Central govt jobs alert: இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசின் நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
  MT(Electronics)12
  MT (Mechanical )10
  MT( Electrical)03
  MT (Metallurgy)02
  MT(Computer Science)02
  MT(Optics)01
  MT(BusinessDevelopment)01
  MT( Finance)03
  MT(Human Resources)03
  மொத்தம்37

  இப்பணிகளுக்கான சம்பளம் :

  அறிவிப்பில் வெளியிட்ட தகவலின் படி இப்பணிக்கு ரூ.40,000 - 1,40,000/- வரை சம்பளமாக குறிப்பிட்டுள்ளது.

  வயது வரம்பு :

  இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  கல்வித்தகுதி:

  பணிகல்வித்தகுதி
  MT(Electronics)எலெக்ரானிக் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு
  MT (Mechanical)மெக்கானிகல் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு
  MT( Electrical)எலெக்டிரிக்கல் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு
  MT (Metallurgy)மேடாலூர்ஜி இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு
  MT(Computer Science)கம்பியூட்டர் இன்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு
  MT(Optics)இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு
  MT(BusinessDevelopment)மேற்குறிப்பிட்ட அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ டிகிரி.
  MT( Finance)சிஏ தேர்ச்சி அல்லது எம்.பி.ஏ
  MT(Human Resources)ஏச் ஆர் பிரிவில் எம்.பி.ஏ அல்லது முதுகலைப் பட்டம் .

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பக் கட்டணம்:

  பொதுப் பிரிவினர் ரூ.500/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  SC / ST/ PwBD / Ex-Servicemen / Internal Employee கட்டணம் கிடையாது.

  Also Read : வெளிநாட்டில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு குவைத்தில் பணி

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://www.i-register.co.in/akshayreg22/home.aspx

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 28.11.2022

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs