Home /News /employment /

ஸ்மார்ட்வொர்க் - 5 ஆண்டுகள் வேலையே செய்யாமல் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்ற நபர்!

ஸ்மார்ட்வொர்க் - 5 ஆண்டுகள் வேலையே செய்யாமல் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்ற நபர்!

ஸ்மார்ட்வொர்க்

ஸ்மார்ட்வொர்க்

தன்னுடைய வேலையை மிகவும் ஸ்மார்ட்டாக மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு டேட்டா என்ட்ரி ஊழியர், 5 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்யாமல் பதவி உயர்வும் பணி உயர்வு பெற்று வந்துள்ளதை அவரே தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் பணித்திறன் மற்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவை எல்லா நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. கடின உழைப்புடன் ஸ்மார்ட்டான உழைப்பும் தேவை. தன்னுடைய வேலையை மிகவும் ஸ்மார்ட்டாக மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு டேட்டா என்ட்ரி ஊழியர், 5 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்யாமல் பதவி உயர்வும் பணி உயர்வு பெற்று வந்துள்ளதை அவரே தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டேட்டா என்ட்ரி வேலையில் ஒரு நபர் பணிக்குச் சேர்ந்தார். அவருக்கு நைட் ஷிஃப்ட் வழங்கப்பட்டது. வேலைக்கான பயிற்சி பெற்ற பிறகு, அவருக்கு அவர் செய்ய வேண்டிய வேலையை ஒரு புரோகிராம் கோட் மூலமாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். எனவே, அந்த புரோகிராம் கோடை உருவாக்க ஒரு டெவலப்பரை நியமித்து தன்னுடைய இரண்டு மாத சம்பளத்தை வழங்கினார். அதன்பிறகு, அவர் அலுவலக நேரத்தில் வேலையை செய்வதைத் தவிர்த்து, தான் விரும்பியதை எல்லாம் செய்து வந்திருக்கிறார்.

"என்னுடைய புதிய வேலையில் எனக்கு நைட் ஷிஃப்ட் வழங்கப்பட்டது. அது ஒரு டேட்டா என்ட்ரி ரோல். ஆர்டரின் விவரங்கள் எனக்கு ஒரு மின்னஞ்சலில் வரும். அந்த விவரங்களை நான் எங்களின் அலுவலகத்தின் சிஸ்டத்தில் சேர்க்க வேண்டும். இது தான் நான் என்னுடைய தினசரி வேலை" அந்த தன்னுடைய வேலை என்ன என்பதை அந்த நபர் தெரிவித்திருந்தார்.

பிறகு, அந்த புரோகிராமின் உதவியுடன், ஒரு மணி நேரத்திற்கு எத்தனை ஆர்டரின் விவரங்களை இன்புட் செய்ய வேண்டும் என்பதை மட்டும் அவர் தெரிவித்தால் போதும். அதாவது, ஒரு மணிநேரத்திற்கு 20 ஆர்டர்கள் விவரங்களை இன்புட் செய்தால் போதும் என்பதை அவர் முன்கூட்டியே தெரிவித்து விட்டால் அதற்கேற்றபடி அந்த கம்ப்யூட்டர் புரோகிராம் அவருடைய வேலையை செய்து விடும்.

ALSO READ |  குளிரில் நடுங்கும் குட்டியானைகள் ... போர்வை போர்த்தி பராமரிக்கும் காஸிரங்கா தேசிய பூங்கா

5 ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறேன் என்று கூறிய இவருடைய வேலையை இவர் நிறுவனம் கண்காணிக்கவே இல்லையா என்ற கேள்வி எழலாம்! “என்னுடைய நிறுவனம் போக்குவரத்து செலவுக்கும், நைட் ஷிப்ட்டுக்கான அலவன்சும் வழங்கவேயில்லை. எனவே நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலிருந்தே வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகிறேன்” என்று கூறினார். இதனால், இவர் வேலையை எப்படி செய்கிறார் என்பது பற்றி நிறுவனத்துக்கு சந்தேகம் எழவே இல்லை.

முதல் இரண்டு ஆண்டுகள் புரோகிராம் செய்யும் வேலையில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரி பார்ப்பார். அதன் பின்பு அவருக்கு பிடித்த போது திரைப்படங்கள் பார்ப்பது, தூங்குவது, வெளியே செல்வதுமாக இருந்துள்ளார். வேலையைப் பாராட்டி பல முறை இவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இதை விட நல்ல வேலைகள் கிடைத்தது. ஆனால் இந்த வேலையை விட வேண்டும் என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு இல்லை, என்று இதே வேலையில் இருந்துள்ளார்.

ALSO READ |  படுத்துக்கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் டிஜிபிக்கு நீதிபதி எச்சரிக்கை

சிலநேரங்களில் இவர் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள் இவருடன் போட்டி போட்டுக் கொண்டு கூடுதலாக ஆர்டர்கள் என்ட்ரியை முயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் இவரும் தன்னுடைய எண்ணிக்கையை அதிகரித்து விடுவாராம்.
“எப்போதும் முதல் இடத்தில் நான் தான் இருப்பேன். அதே போல, டேட்டா என்ட்ரி ஆர்டர்கள் எண்ணிக்கையை அவ்வப்போது மாற்றிவிடுவேன்” என்றும் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளாக ஒரு முறை கூட விடுமுறை எடுக்காத காரணத்திற்காகவே இவருக்கு இரண்டு முறை சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர் வேலையிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. இந்த நபர் தன்னுடைய வேலைக்காக ஒரு ப்ரோக்ராம் கோடை செய்து அதன் வழியாக பணியாற்றி வந்ததைப் போலவே, இவர் நிறுவனம் ஒரு புரோகிராமை வடிவமைத்து, இவரை இந்தப் பணியில் இருந்து நீக்கியது.

ALSO READ | அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

அதற்கு பதிலாக, ஒரு தொகையை நிறுவனம் அளித்தது மட்டுமின்றி, அலுவலக எக்யூப்மென்ட் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், நிறுவனத்தின் வேறு ஏதேனும் ஒரு பணியில் இவர் வேலைக்கு அப்ளை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“இவை பற்றி இதுவரை நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. என் குடும்பம் மற்றும் என் மனைவிக்குக் கூட இதுவரை தெரியவில்லை. இப்பொழுது இந்த வேலை முடிந்துவிட்டத. என்னுடைய மிகப்பெரிய ரகசியமாக இருந்ததை இப்போது பகிர்கிறேன்” என்று Reddit இல் பகிர்ந்துள்ளார்.

உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் செய்து விட்டீர்கள் உங்களால் நிறுவனத்திற்கு எந்த பிரச்சினையும் அதனால் வரவில்லை எனவே நீங்கள் அதை எப்படி செய்தால் என்ன என்று என்ற நோக்கத்தில் பலரும் இவரை பாராட்டி வந்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Job, Salary hike

அடுத்த செய்தி