மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள 370 பணியிடங்கள்

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

Web Desk | news18
Updated: January 7, 2019, 6:32 PM IST
மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள 370 பணியிடங்கள்
எம்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
Web Desk | news18
Updated: January 7, 2019, 6:32 PM IST
மத்திய சுரங்கத் துறையின் கீழ் இயங்கும் முக்கிய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட். ஒடிஸா மாநிலம், புர்லா நகரிலுள்ள இந்த நிறுவனத்தில் 370 பணியிடங்கள் காலியாக உள்ளது.

பிரிவு வாரியாக: இந்த 370 பணியிடங்களில் ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு 149 இடங்களும், மைனிங் சிர்தார் பணிக்கு 201 இடங்களும், டெபுடி சர்வேயர் பணிக்கு 20 இடங்களும் உள்ளன.

வயதுவரம்பு: 10/1/2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி வேறுபடுகிறது. பொதுவாக மைனிங் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமா படித்தவர்களும், மைனிங் சிர்தார், மைனிங் சர்வேயர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 10. மேலும் விவரங்களுக்கு http://www.mahanadicoal.in/OurPeople/pdf/notice%20ENGLISH%20&%20HINDI.pdf என்ற லிங்க்-ஐ பார்க்கவும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாமே! https://tamil.news18.com/news/employment/isro-invites-applications-for-scientistsengineer-vacancies-87237.html
Loading...
Also watch

First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...