வெளிமுகமை மூலம் (Outsourcing) முன்னாள் இராணுவத்தினார்கள் கொண்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபயோகங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களை நியமித்திட அரசு பதிவு பெற்ற நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை கோரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தில்,
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் ஐந்து கோபுர வாயில்களில் பொருட்கள் பாதுகாப்பு அறைகளில் உள்ள ஸ்கேனரில் பக்தர்களின் பொருட்களை ஸ்கேன் செய்தல் பணி, திருக்கோயில் உட்புறம் காவல் பணி மற்றும் உபகோயில்களில் இரவு காவல் பணிக்கு இந்து மதத்தை சேர்ந்த முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாவலர்களை வெளிமுகமை (Out Sourcing) முறையில் நியமித்திட முன் அனுபவமும், முன் தகுதியும், ISO தரச்சான்றிதழ் பெற்ற, அரசு பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை திருக்கோயில் நிர்வாகம் வரவேற்கிறது.
மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் திருக்கோயில், அலுவலகத்திற்கு ஜுலை 15ம் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து கிடைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி, வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் ஜுலை 15ம் தேதி காலை 11:00 மணிக்கு இத்திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவரால் இந்து அறநிலையத்துறை அலுவர் மற்றும் வந்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் திறக்கப்படும்
குறிப்பு:
ஒப்பந்தக்காலம் | பணி ஆணை வழங்கப்பட்ட நாள் முதல் 30.06.2023 வரை |
ஒப்பந்தப்புள்ளி படிவத்தின் விலை | ரூ.15,000/ + வரி ரூ.1800/(இத்திருக்கோயில் கருவூலத்தில் அலுவலக வேலை நாட்களில் பகல் 12.30 மணிக்குள் செலுத்தப்பட வேண்டும். |
ஒப்பந்தப்புள்ளி விற்பனைக் காலம் | 30.06.2022 முதல் 14.07.2022 வரை மாலை 5.00 மணி வரை (அலுவலக வேலை நேரத்தில் மட்டும்) |
பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கொடுக்க கடைசி நாள் | 15.07.2022 (பிற்பகல் 10.30 மணி வரை) |
ஒப்பந்தப்புள்ளி பெட்டி உள்ள இடம் | திருக்கோயில் அலுவலகம் |
ஒப்பந்தப்புள்ளி திறக்கும் நாள் | 15.07.2022 பிற்பகல் 11.00 மணி வரை (தொழில்நுட்ப உறை) |
ஒப்பந்தப்புள்ளி படிவம் கிடைக்கும் இடம் | மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அலுவலகம், கீழ்காணும் இனைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tenders.tn.gov.in,www.tnhrce.gov.in |
முன்வைப்புத் தொகை | ரூ.2,00,000/ (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) |
மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை: 79
ஒப்பந்தப்புள்ளி முன் வைப்புத் தொகை ரூ.2.00.000/- ( ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்)
இதையும் வாசிக்க: அப்ரண்டிஸ்களின் வங்கி கணக்குக்கு நேரடி பணம்- மத்திய அரசு
துணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்ற பதவிப் பெயரில் மாற்றத்தக்கதாக வங்கி வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: இந்திய வங்கிகளில் 6035 எழுத்தர் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி?
மேலும் தெளிவான விவரங்களுக்கு ஒப்பந்ததாரர்கள், 0452 2344360 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மின்னஞ்சல் தொடர்புக்கு info@maduraimeenakshi.org
maduraimeenakshiamman@tnhrce.com.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Security guards, Temple