Home /News /employment /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை... ரூ.65,500 வரை சம்பளம் - 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை... ரூ.65,500 வரை சம்பளம் - 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை

இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 18/08/2022 ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள பணியாளர்களை நியமனம் செய்திட இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 18.08.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

















































































    தாளம்01 ரூ.18,500-58,600  Pay Matrix Level 22தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    வேதபாராயணம்02ரூ.15700-50,0001Pay Matrix Level 16தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
    உபகோயில் ஓதுவார்01ரூ.12,600-39,900 Pay Matrix Level 13தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2.சமய நிறுவனங்களால் அல்லது அரசுநிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் இது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி பரிசாரகர்04

     

    ரூ.10,000-31,500 Pay Matrix Level 10

     
    தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
    உதவி யானைப் பாகன்01 ரூ.11,600-36,800 Pay Matrix Level 12 தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யானைக்குப் பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
    கருணை இல்லக் காப்பாளர்01 ரூ.15,900-50,400 Pay Matrix Level 17 தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்02 ரூ.10,000-31,500 Pay Matrix Level 10 தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    தொழில் நுட்ப உதவியாளர்01 ரூ.20,600-65,500 Pay Matrix Level 27
    ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்01 ரூ.16,600-52,400 Pay Matrix Level 18அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இயந்திரத்துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    பிளம்பர்01 ரூ.18,000-56,900 Pay Matrix Level 19அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் , குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சமையல்காரர்01ரூ.13200-41800  Pay Matrix Level 14தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2.50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி சமையல்காரர்01ரூ.11600-368001  Pay Matrix Level 12தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    துப்புரவு01ரூ.10000-31500| Pay Matrix Level 10தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    1. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    2. விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.

    3. கருணை இல்லக் காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.'

    4. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.100/-ஐ திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் வரிசை எண் இட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

    5. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    6. இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலக வேலைநாட்களில் அலுவலக வேலைநேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி