முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 11 ஆயிரம் காலியிடங்கள்.. முடங்கிய எஸ்.எஸ்.சி இணையதளம் - கடைசி தேதியை நீட்டிக்க மதுரை எம்பி கோரிக்கை

11 ஆயிரம் காலியிடங்கள்.. முடங்கிய எஸ்.எஸ்.சி இணையதளம் - கடைசி தேதியை நீட்டிக்க மதுரை எம்பி கோரிக்கை

மதுரை எம்பி சு வெங்கடேசன்

மதுரை எம்பி சு வெங்கடேசன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்.எஸ்.சி தேர்வாணையம் (Staff Selection commission) அறிவித்துள்ள MTS (Multi-Tasking Examination, 2022 ) தேர்விற்கான விண்ணப்ப கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை அறிவித்தது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. இந்த பதவிக்கு, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் உடனடியாக விண்ணப்பியுங்கள்

இந்நிலையில், இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் நிறைவடையும் நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், " ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு, ஆன் லைன் விண்ணப்பங்களுக்கான இணைய தளம் இயங்கவில்லை. உடனே இணைய தளத்தை சரி செய்ய வேண்டும். தொழில் நுட்ப பிரச்சினைகள் குறுக்கிட்டு இருப்பதால் நேர இழப்பை ஈடு கட்டும் வகையில் விண்ணப்ப கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எஸ்எஸ்சி தேர்வாணையம் இந்த பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடுகையில், " கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்திருந்தது.

First published:

Tags: Central Government Jobs