ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசுத் துறைகளில் வேலை... மதுரை இளைஞர்கள் கவனத்திற்கு!

அரசுத் துறைகளில் வேலை... மதுரை இளைஞர்கள் கவனத்திற்கு!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Job ALert: Madurai District Job vacancies: உளவியலாளர் (Psychologist /Counsellor) பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 23,000 வழங்கப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai |

  மதுரை மாவட்ட நலச்சங்க திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்: 

  1. குளிர்பதன கம்மியர் (Refrigerator Mechanic) -1

  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 20,000/- ; வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்;  ITI Refrigeration Mechanic and Air Conditioning பாடநெறியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  2. EDSS-LIMS IT Co-ordinator -1

  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 16,500/-; வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்; எம்சிஏ/பிடெக்/பிஇ  பாடநெறியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  3. வட்டார கணக்கு உதவியாளர் (Block Accounts Assistant) - 3

  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 16,500/- ;  வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும் ;  பி.காம்  படிப்புடன் Tally முடித்திருக்க வேண்டும்.

  4. RBSK மருந்தாளுநர் - 1

  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 15,000/-;     வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்; மருத்துவ படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் (B.pharm/Dpharm) முடித்திருக்க வேண்டும்

  உளவியலாளர் (Psychologist /Counsellor)  - 1;  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 23,000/-   வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்; உளவியல் பாடநெறியில் முதுநிலை பட்டம் பெற்று குறைந்தது 2 ஆண்டுகால முன்னனுபவம் இருக்க வேண்டும்

  சமூக பணியாளர் (Social Worker) -1;  தொகுப்பூதியம் - மாதம் ரூ. 23,800/-   வயது 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்; சமூகவியல்/ சமூக பணி பாடநெறியில் முதுநிலை பட்டம் பெற்று, 2 ஆண்டுகள் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

  நிபந்தனைகள்:

  இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது; பணியின் காலம் 1 ஆண்டு;  எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது; ; பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க10ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரேசன் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

  விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice-category/recruitment என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested)" செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:  துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள்,  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை மாவட்டம் -625 014 ஆகும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment