குரூப் 4 பணியிடங்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவு!

10-ம் வகுப்பு முடித்தவருக்கான தேர்வுக்கு பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களும் போட்டி போடுவதாகவும், அப்படி தேர்வான பிறகு எப்போதும் போட்டித் தேர்வுக்கு தயார் ஆவதிலேயே ஆர்வம் காட்டுவதால், அலுவலகப் பணி பாதிக்கப்படுவதாக கூறினார்.

குரூப் 4 பணியிடங்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 11, 2019, 4:36 PM IST
  • Share this:
குரூப் 4 மற்றும் அதற்கு கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி இருப்பது போல் கண்டிப்பாக அதிகபட்ச கல்வித்தகுதியையும் நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற சக்கரைசாமி என்பவர், நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால், தனக்கு பணி வழங்காமல், கூடுதல் கல்வித் தகுதி எனக் கூறி நிராகரித்துவிட்டதாகவும், எனவே வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் இருக்கும் நிலையில், பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதாகவும், கூடுதல் கல்வித் தகுதி உடையோர் முறையாக பணியாற்றுவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

10-ம் வகுப்பு முடித்தவருக்கான தேர்வுக்கு பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களும் போட்டி போடுவதாகவும், அப்படி தேர்வான பிறகு எப்போதும் போட்டித் தேர்வுக்கு தயார் ஆவதிலேயே ஆர்வம் காட்டுவதால், அலுவலகப் பணி பாதிக்கப்படுவதாக கூறினார்.

எனவே மனுவை நிராகரிப்பதாக கூறிய நீதிபதி, குரூப் 4 பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி இருப்பதுபோல், அதிகபட்ச கல்வித் தகுதியையும் 3 மாதங்களில் நிர்ணயிக்குமாறு, டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்தார்.

இதனால், பி.இ. போன்ற படிப்பை படித்தவர்கள் இனி குரூப் 4 எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading