Home /News /employment /

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக தூய்மையாக்கம் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக தூய்மையாக்கம் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலக தூய்மையாக்கம் பணி

அலுவலக தூய்மையாக்கம் பணி

Madras High Court Recruitment 2022 : 04/02/2022 மாலை 5.45 மணிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம் சென்னை 600104. விண்ணப்ப உறைமேல் அலுவலகத் தூய்மையாக்க பணிக்காக எனக் குறிப்பிடவும்.

மேலும் படிக்கவும் ...
    சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் தூய்மை பணி மேற்கொள்வதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம் , மாநில அரசு குற்றவியல் அலுவலகம் , கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம் , உட்பட பல சட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அக்கட்டிடம் முழுமைக்கும் தூய்மை பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன் அனுபவமுள்ள தூய்மை பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன.

    மேலும் இவ்வலுவலகத்தின் 06/01/2022 தேதியிட்ட அறிக்கையின் படி கட்டிடத்தை பார்வையிட 21/01/2022ம் தேதி வரை அலுவலக பணி நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. மேலும் 04/02/2022 மாலை 5.45 மணிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம் சென்னை 600104 .

    விண்ணப்ப உறைமேல் அலுவலகத் தூய்மையாக்க பணிக்காக எனக் குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 044-25341024 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி