Home /News /employment /

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1,412 காலிப்பணியிடங்கள்... 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் - நாளை கடைசி நாள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1,412 காலிப்பணியிடங்கள்... 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் - நாளை கடைசி நாள்

நீதிமன்றத்தில் சூப்பர் வேலை

நீதிமன்றத்தில் சூப்பர் வேலை

Madras High Court Recruitment 2022 : சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். அனைத்து பதவிகளுக்கும், 10thதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    சென்னை உயர்நீதி மன்ற இணையதள பக்கத்தில் நகல் பரிசோதகர் (Examiner) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) , கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), Lift Operator, Process Server , Reader ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவே வேண்டும். தகுதி மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான காலியிட விவரங்கள் : 











































    வேலையின் பெயர்காலியிட விவரங்கள்
    நகல் பரிசோதகர் (Examiner)118
    முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr)302
    இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)574
    கட்டளை எழுத்தர் (Process Writer)3
    ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)267
    Lift Operator9
    Process Server41
    Reader39
    காலியிடங்கள்1412

    கல்வித் தகுதி : 

    அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Xerox Operator பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும்.

    ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

    முக்கியமான நாட்கள்:

    விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 22.08.2022

    தேர்வுக் கட்டணம்: ஓட்டுநர் பதவிக்கு: ரூ.50, மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    விண்ணப்பம் செய்வது எப்படி: 

    இணைய வழி விண்ணப்பங்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்வின் தன்மை:

    பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு - 50 வினாக்கள்

    பகுதி – II, பொது அறிவு, திறனறிவு,  மனக்கணக்கு நுண்ணறிவு   - 100 வினாக்கள்

    தேர்ந்தெடுக்கப்படும் முறை : 

    எழுத்துத் தேர்வின் பகுதி I மற்றும் பகுதி II ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

    இடஒதுக்கீட்டு வீதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.

    அறிவிப்பு விவரம்

    https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/districtList.jsp?notificationLink=link1

    https://www.mhc.tn.gov.in/recruitment/login

    https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_link1district=2_Tamil.pdf

    இந்த பக்கத்தை காணவும்.

    மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான மாவட்டத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும் .
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Government jobs, Job Vacancy, Jobs

    அடுத்த செய்தி