சென்னை உயர்நீதி மன்ற வளாகம், சட்ட அலுவலர்கள் கட்டிடம், வழக்குரைஞர் அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
வயது வரம்பு: 18-வயது முதல் 30 வயது ( 01.07.2019-ல் வயது 18 பூர்த்தியாகியிருத்தல் அவசியம் )
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
5-வருடத்திற்கு குறையாத இலகுரக வாகன ஓட்டுநருக்கான அனுபவம் தேவை
விண்ணப்பிக்கும் பொழுது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
இப்பணிக்கான சம்பள விகிதம் ஊதிய நிலை -8, ரூ 19,500 /- ஆகும்.
இதற்கான விண்ணப்பத்தினை அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர், சட்ட அலுவலர்கள் கட்டிடம் , 3-வது தளம் , உயர்நீதிமன்றம் சென்னை -104 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்பும் விண்ணப்பங்கள் 02-03-2020 மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப உறையின் மேல் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் என எழுதப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் பொழுது புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ் அனைத்திலும் "self attested signature"
உடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப உறையினுள் ஒரு self envelop cover affixed with RS. 25/-Postal Stamp வைத்து அனுப்பவேண்டும்.
Also see:
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.