Home /News /employment /

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - நேரடி நியமனம் - முழு விவரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - நேரடி நியமனம் - முழு விவரம்

 நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு விண்ணப்பத் தாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் Examiner / Reader / Senior Bailiff/Junior Bailiff/ Process Server / Process Writer / Xerox Operator / Lift Operator / Driver ஆகிய பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு விண்ணப்பத் தாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்.

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி : 24-07-2022 

    விண்ணப்பிக்க கடைசித் தேதி : 22-08-2022

    விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

    STEP : 1  இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் "விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்" மற்றும் “இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி" என்பதை முழுமையாக படித்துப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    லேண்டிங் பக்கத்தில் "Click here to apply" என்ற இணைப்பை கிளிக் செய்யவும், அதை கிளிக் செய்தபின் அறிவிக்கை 1 மற்றும் அறிவிக்கை 2 திரையில் தோன்றும் விண்ணப்பதாரர்கள் அவரவர் விண்ணப்பிக்க வேண்டிய அறிவிக்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    STEP : 2 அறிவிக்கை 1 அல்லது 2ஐ கிளிக் செய்தவுடன், கீழ்வரும் பக்கம் தோன்றும்.



    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நீதித்துறை மாவட்டத்தை தேர்ந்து எடுக்கவும் (விண்ணப்பதாரர்கள் மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும், ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது). Villupuram(including Kallakurichi district) Tiruvannamalai

    STEP : 3 நீதித்துறை மாவட்டத்தை தேர்ந்தெடுத்த பின்னர், விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் என்ற திரை தோன்றும். அதில் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் அறிவிக்கையினை தனித்தனியாக பார்க்க/பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    1) புதிய பயனர்கள், "புதிய பதிவு செய்ய விழைவோர் (Registration (New Users)"என்பதை கிளிக் செய்யவும்.

    2) ஏற்கனவே பதிவு செய்தோர் "Apply Online (Already Registered Candidates)" என்பதை கிளிக் செய்யவும்.

    3) புதிய பதிவு செய்ய விழைவோர் என்பதை கிளிக் செய்தால் "பதிவு படிவம்" திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள், தங்களது அடிப்படை தகவல்களை பதிவு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், பாலினம், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களை உள்ளிட்டு சமர்பித்தவுடன், ஒரு பயனாளர் ID மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர் பயனாளர் ID. கடவுசொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்திற்குள் உள்நுழைய வேண்டும்.

    அங்கு விண்ணப்பதாரர் அவர்களின் அடிப்படை பதிவை பதிவு செய்து. முடிக்க அனைத்து வகுப்பினரும் (விலக்களிக்கப்பட்ட பிரிவினர் உட்பட) பதிவுக்கட்டணமாக ரூபாய் அறுபது + பொருந்தக்கூடிய வரிகள் செலுத்தினால் மட்டுமே பதிவு செய்தல் நிறைவடையும். பதிவு கட்டணத்தை செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் விரிவான விண்ணப்ப படிவத்திற்கு செல்ல முடியும். விண்ணப்பதாரர் முந்தைய “sign up form" பதிவில் வழங்கிய விவரங்கள், விரிவான விண்ணப்ப படிவத்தில் திருத்தமுடியாத பகுதிகளாக எதிரொலிக்கும்,

    முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர் சிகப்பு நட்சத்திரம் குறியிட்ட அனைத்து பதிவுகளையும் கட்டாயமாக நிரப்ப வேண்டும்.

    விண்ணப்பப்படிவத்தில் கீழ்கண்ட பகுதிகள் அடங்கியிருக்கும்:

    1. சுய விவரங்கள்

    2. கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள்

    3. கூடுதல் விவரங்கள்

    4. புகைப்படத்தை பதிவேற்றம் செய்க

    5.கையொப்பத்தை பதிவேற்றம் செய்க

    6. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்க

    7. முன்னோட்டம் 8. உறுதிமொழி

    9. கட்டண பிரிவு

    10.விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தல்

    (i) சுயவிவரங்கள்:

    i) விண்ணப்பதாரர் தனது பூர்வீகம் மற்றும் பாலினத்தை சுய விவர பக்கத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். பாலினத்தை தெரிவு செய்தபின்னர் உறுதியளிப்பு பெட்டி தோன்றும். விண்ணப்பதாரர் தனது பாலினத்தை உறுதி செய்ய " OK * பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் விண்ணப்பதாரர் தனது நிரந்தர முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை அதற்கான இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ii)  தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் உள்ளதா என்ற கேள்விக்கு ''ஆம்'' என்று தெரிவு செய்தால் சாதிகளின் பெயர் பட்டியல் கொண்ட ட்ராப் டவுன் பெட்டி தோன்றும். அதில் விண்ணப்பதாரர் தனது சாதியை தெரிவு செய்ய வேண்டும்.

    iii ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் உள்ளதா என்ற கேள்விக்கு “இல்லை" என்று தெரிவு செய்தால் "OC" என தானாக பதிவு செய்து கொள்ளும். விண்ணப்பதாரர் தனது தேசிய இனம் மற்றும் மதத்தை நிரப்ப வேண்டும்.

    அறிவிப்பு விவரம்

    https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/

    இந்த பக்கத்தை காணவும்.

    விண்ணப்பதாரர் விவர பக்கத்தில் உள்ள அனைத்து கட்டாய சுய பதிவுகளை உள்ளீடு செய்து, "சேமி மற்றும் தொடர்க" என்ற பட்டனை க்ளிக் செய்து, அதற்குப் பின் கல்வித் தகுதி பக்கத்திற்கு தொடர வேண்டும்.

    கல்வித்தகுதி :

    விண்ணப்பதாரர் தனது கல்வித் தகுதி விவரங்களை அதற்கான கட்டத்தில் நிரப்ப வேண்டும். மேலும், தமிழ் மொழியில் பயின்றதற்கான தகுதி மற்றும் கல்வித்தகுதிக்கான பிரிவு ஏதேனும் இருந்தால் அதை அதற்கான கட்டத்தில் நிரப்ப வேண்டும்.

    பின்னர் 'சேமி மற்றும் தொடர்க" என்ற பட்டனை க்ளிக் செய்தால், "கூடுதல் விவரங்கள்" என்ற TAB திரையில் தோன்றும்.

    கூடுதல் விவரங்கள் :

    விண்ணப்பதாரர் தனது இரத்த உறவுமுறைகளில் எவரேனும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணியில் இருப்பின் அதற்கான விவரங்களை தெரிவிக்கவும். “ஆம்” என்று தெரிவு செய்திருந்தால், அவர்களுடைய பெயர். முகவரி மற்றும் விண்ணப்பதாரருடனான உறவுமுறையை உள்ளீடு செய்ய வேண்டும்.

    மேலும் விண்ணப்பதாரர் ஒழுங்குமுறை சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த உள்ளீடு செய்யவும்.

    புகைப்பட பதிவேற்றம்:

    விண்ணப்பதாரரின் பயனாளர் ID, பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி தானாகவே திரையில் தோன்றும். ii. விண்ணப்பதாரர் சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் (அனுமதிக்கப்பட்ட அளவு 20 KB முதல் 50 KB வரை மற்றும் JPG, JPEG வடிவம் மட்டுமே). பின்னர் விண்ணப்பதாரர் "CHOOSE FILE" பட்டனை க்ளிக் செய்து, புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தை பதிவேற்றம் செய்த பின்னர் விண்ணப்பதாரர் "CONTINUE" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் "UPLOAD SIGNATURE" பக்கம் தோன்றும்.

    கையொப்ப பதிவேற்றம் :

    விண்ணப்பதாரரின் பயனாளர் ID. பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி தானாகவே திரையில் தோன்றும். விண்ணப்பதாரர் தனது கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் (அனுமதிக்கப்பட்ட அளவு 10 KB முதல் 20 KB வரை மற்றும் JPG, JPEG, அல்லது PNG வடிவம் மட்டுமே). பின்னர் விண்ணப்பதாரர் "CHOOSE FILE" பட்டனை க்ளிக் செய்து, கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். கையொப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர் விண்ணப்பதாரர் "CONTINUE" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அனைத்து செயல்பாடுகளும் முடிந்த பின்னர் "Uploading Documcnts " பிரிவு தோன்றும்

    சான்றிதழ்கள் பதிவேற்றம் :

    விண்ணப்பதாரரின் பயனாளர் ID. பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி தானாகவே திரையில் தோன்றும். விண்ணப்பதாரர் தனது ஸ்கேன் செய்த கோப்புகள் / சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர் "CHOOSE FILE" பட்டனை க்ளிக் செய்து, கோப்புகள் / சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (அனுமதிக்கப்பட்ட அளவு 60 KB முதல் 1 MB வரை மற்றும் அனுமதிக்கப்பட்ட வடிவம் PDF மட்டுமே). சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த பின்னர் விண்ணப்பதாரர் "CONTINUE" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அனைத்து செயல்பாடுகளும் முடிந்த பின்னர் "Preview" பிரிவு தோன்றும்.

    மாதிரி:  இப்பிரிவில், விண்ணப்பப் படிவத்தில் நிரப்பப்பட்ட அனைத்து விவரங்களும், அந்தப் பிரிவுக்கான திருத்த விருப்பங்களுடன் ஒரே பக்கத்தில் காட்டப்படும். இங்கு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை திருத்த விரும்பினால், குறிப்பிட்ட பிரிவிற்கு எதிராக திருத்த இணைப்பை க்ளிக் செய்து, விவரங்களை மாற்றவும் அல்லது புதுப்பிக்கவும் முடியும். இப்பக்கத்தின் இறுதியில் "PROCEED TO SUBMIT FORM" பட்டனுடன் விண்ணப்ப படிவம் ஒரே பக்கத்தில் காட்டப்படும். "SUBMIT APPLICATION FORM" பட்டனை க்ளிக் செய்த பின் "Dcclaration" பக்கம் திறக்கப்படும். செக்பாக்சை இயக்கிய பிறகு விண்ணப்ப செயல்முறையை முடிக்க "SUBMIT பட்டனை க்ளிக் செய்யவும். “SUBMIT” பட்டனை க்ளிக் செய்த பின், விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பத்தில் எந்த ஒரு திருத்தங்களையும் மேற்கொள்ள இயலாது. இறுதியில், அந்த பக்கம் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு செல்லும்,

    (viii)கட்டணம் செலுத்தும் பிரிவு (கட்டண நுழைவாயில் வழியாக):

    திரையில் அறிவிக்கை எண் 1 மற்றும் அதனில் கூறப்பட்ட பதவிகருக்கு (ஒவ்வொன்றிற்கும்) தலா ரூ.550/- மற்றும் அறிவிக்கை எண் II அதற்கான பதவிக்கு ரூ.500/- தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அறிவிப்பு தோன்றும். "Proceed to Pay" என்று தோன்றும் பட்டனை க்ளிக் செய்தால், கட்டண நுழைவாயிலிற்கு செல்லும்.

    அவ்வாறு செல்லும் விண்ணப்பதாரர் பணம் செலுத்துவதற்கான கட்டண தேர்ந்தெடுக்கவும். பக்கத்தில், முறையை ii. கட்டண நுழைவாயிலில் கீழ்கண்ட கட்டணமுறைகள் உள்ளது. அ) இணைய வழி வங்கிச் சேவை (நெட் பேங்கிங்) ஆ) கடன் அட்டை இ) பற்று அட்டை விண்ணப்பதாரர் கட்டணத்தை இணைவழியில் மட்டுமே (இணைய வழி வங்கிச் சேவை (நெட் பேங்கிங்)/ கடன் அட்டை / பற்று அட்டை) செலுத்த முடியும்.

    விண்ணப்பதாரர் கட்டண பரிவர்த்தனை செய்யும் போது தெரியாத காரணத்தால் பரிவர்த்தனை துண்டிக்கப்படுமாயின். மறுமுறை கட்டண பரிவர்த்தனை செய்யலாம். விண்ணப்பதாரர் இணையவழியில் கட்டணம் செலுத்திய பின், தனது கட்டண விவரங்களை முகப்புப்பக்கத்தில் (home page) சரிபார்த்துக் கொள்ளலாம். பின்னர் விண்ணப்பம் மற்றும் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் திரும்ப பெறுதல் மற்றும் ரத்து செய்தலுக்கான விதிமுறைகள் இணையதளத்தில் செலுத்திய கட்டணம் எந்த ஒரு காரணத்திற்காகவும் ரத்து செய்யவோ திரும்ப பெறவோ முடியாது. எனினும், தொழில்நுட்பக் காரணத்தினால் ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டால், அப்படி செலுத்தப்பட்ட தொகை வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அவகாசத்திற்குள் திருப்பி அனுப்பப்படும்.

    விண்ணப்ப பதிவிறக்கம் :

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரருடைய dashboard -ல் உள்ள "APPLICATION FORM" என்ற link-யை க்ளிக் செய்யலாம்.

    விண்ணப்பிக்கும் பதவி : 

    விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின், பின்நாளில் விண்ணப்பித்த அதே மாவட்டத்தில் மற்ற ஏதேனும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் (ஏற்கனவே விண்ணப்பித்த பதவி/பதவிகள் தவிர) முகப்பு பகுதியில் உள்ள “APPLY POST” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    Phone number (for Application/Payment related queries) - 022 - 62507772
    Phone number (For Eligibility related queries) - 044 - 25330161
    Email id - MHCCRBS2022@onlineregistrationform.org

    உறுதிமொழி :   Examiner Reader/ Senior Bailiff/ Junior Bailiff/ Process Server/ Process Writer/ Xerox Operator/ Lift Operator/ Record Clerk/ Driver ஆகியவற்றுக்கான நேரடி ஆட்சேர்ப்பிற்கான அறிவிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை இணைய வழியில் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு முன் முழுமையாக படித்து புரிந்து கொண்டேன். நான் இதற்காக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிகளையும் விதிமுறைகளையும் நான் இதன்மூலம் ஏற்றுக்கொள்கிறேன். நான் அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்களை படித்து, புரிந்து கொண்டேன் மற்றும் மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களின் நடக்க ஒப்புக் கொள்கிறேன்.இவ்விதம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பித்து பயனடையலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி