ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியாவின் பெண்கள் பணியாற்றுவதற்கான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

இந்தியாவின் பெண்கள் பணியாற்றுவதற்கான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதிக நம்பிக்கை, அதிக செயல் திறன் பண்பாடு, மரியாதை, ஒழுக்கம், பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுவதற்கு இந்தியாவின் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிக நம்பிக்கை, அதிக செயல்திறன் பண்பாடு, மரியாதை, ஒழுக்கம், பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. டெலாய்ட் இந்தியா, டாடா கம்யூனிகேஷன்ஸ், பாரதி பவுண்டேஷன், சேல்ஸ் போர்ஸ் ஆகியவையும் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை பெண்கள் பணியாற்ற சிறந்த 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முன்னேற்றம், நிலை தன்மை, அதிக நம்பிக்கை மற்றும் அதிக செயல்திறன், நிறுவனங்களில் பணியாற்றும் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வணிக நிறுவனங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவையும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன.

சிவ நாடார் ஸ்கூல், டெலாய்ட் இந்தியா, சிஸ்கோ சிஸ்டம்ஸ், டாடா கம்யூனிகேஷன் பாரதி பவுண்டேஷன் எச்பி, சேல்ஸ் போர்ஸ் ஆகியவையும் பெண்கள் பணியாற்ற சிறந்த நிறுவனங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

Read More : மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் 540 காலியிடங்கள்: கல்வித் தகுதி, சம்பள நிலை என்ன?

இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 2,31,764 பணியாளர்களுடன் 99 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனமானது மேற்கூறிய பரிமாண காரணிகளான அதிக நம்பிக்கை, அதிக செயல்திறன், கலாச்சாரம், நம்பகத்தன்மை, மரியாதை, நேர்மை, பெருமை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனமானது 1,84,392 பணியாளர்களுடன் 30-வது இடத்தை பெற்றுள்ளது டெலாய்ட் நிறுவனம் 23 வது இடத்தை பெற்றுள்ளது.

டாப் 10: பெண்கள் பணியாற்ற ஏற்ற பெரு நிறுவனங்கள் (>500 பணியாளர்கள்)

1. அக்சன்ஜர் சொல்யூஷன்ஸ் .பிரைவேட் லிமிடெட், 2.சிஸ்கோ சிஸ்டம் பிரைவேட் லிமிடெட், 3.ஃபோர்டு மோட்டார் பிரைவேட் லிமிடெட், 4.ஹெச் அண்டு ஆர் பிளாக் இந்தியா பிரைவேட் லிமிடெட், 5.ஹெச் பி, 6.பிட்னி பாவெஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 7.சேல்ஸ் ஃபோர்ஸ், 8.சின்க்ரோனி இன்டர்நேஷனல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 9.டாட் ஒர்க்ஸ், 10.வாய்ஸ் ஆகியவை இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களில் வரிசையில் பெண்கள் பணியாற்ற டாப் 10 சிறந்த நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன..

டாப் 10: பெண்கள் பணியாற்ற ஏற்ற நடுத்தர நிறுவனங்கள்( 100-500 பணியாளர்கள்)

1.சாலட் ஹோட்டல்ஸ் லிமிடெட், 2.எல்கா காஸ்மெட்டிக், 3.எலி லில்லி அண்டு கம்பெனி, 4.பைஞ்சென்T, 5.ஃபார் அவர் நியூ அபேரல்ஸ் பிரைவேட் லிமிடெட், 6.கஸ் குளோபல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 7.எம் ஐ கியூ டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட், 8.நெட் கனெக்ட் பிரைவேட் லிமிடெட், 9.பேர்ல் அகாடெமி, 10.எஸ் எஸ் ஐ ஸ்டாப்பிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஸ்மால் மீடியம் வகை நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற ஏதுவான முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.

இந்தியாவில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் பணியாற்ற சிறந்த நிறுவனங்களை பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கிரேட் பிளேஸ் டு ஒர்க் என்ற அமைப்பு ரகசிய சர்வே ஒன்று பணியாளர்களிடம் நடத்தியது.

மேலும் அவர்கள் இரு பாலினத்தவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா, அந்த நிறுவனத்தின் கலாச்சாரம் எப்படி உள்ளது ஆகியவற்றையும் ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். மேற்கூறிய நிறுவனங்களில் குறைந்தபட்சம் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நிறுவனங்களில் தங்களது பங்களிப்பை அளிக்கிறார்கள். அதிலும் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தாங்கள் திருப்தியாக வேலை செய்வதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Employment, IT Industry, Women