ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் இங்கே

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் இங்கே

காட்சி படம்

காட்சி படம்

ஐடிபிஐ வங்கியில் அதிகாரி நிலையில் 1,044 பணியிடங்களும்,  துணை மேலாளர் நிலையில் 500 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் குறித்த விபரங்களை இங்கே காண்போம்.

  1. 8,106 வங்கி பணியிடங்கள்: 

  பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டது.

  மொத்த காலியிடங்கள்: 8,106

  ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: ஜூன் 27

  மேலும் அறிய:  8000க்கும் மேற்பட்ட வங்கிப் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐபிபிஎஸ்

  2. அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவு: 

  அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவில் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கேடு வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது.

  காலிப் பணியிடங்கள்: 1,380.

  இதில், தமிழகத்தில் மட்டும் ஹவில்தார், ரைஃபிள்மேன், நயிப் சுபேதார் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 57 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

  மேலும் அறிய:  அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவில் 1380 காலியிடங்கள்: விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? 

  3. இலவச போட்டித்தேர்வு பயிற்சிகள்: 

  படித்த வேலையற்ற எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National Career Service Centre for SC/STs) அறிவித்துள்ளது.

  பயிற்சி காலம்11 மாதம்; ஜுலை 1 முதல்
  உதவித் தொகைமாதம் ரூ.1000 (தேர்வர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது நல்லது; NCS போரட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்)
  இடம்சென்னை, புதுச்சேரியில் உள்ள தேசிய வாழ்வாதார சேவை மையம் (NCS)
  கல்வி கட்டணம்இலவசம்
  வயது1.07.2022 அன்று 27 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்24.06 2022

  மேலும், அறிய: ரூ.1000 ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வு பயிற்சிகள்: அரசு முக்கிய அறிவிப்பு

  4. ஐடிபிஐ வங்கியில் வேலை: 

  அதிகாரி மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள், இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 17ஆம் தேதி வரையில் https://www.idbibank.in/ என்ற முகவரியில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

  அதிகாரி நிலையில் 1,044 பணியிடங்களும்,  துணை மேலாளர் நிலையில் 500 பணியிடங்களும் காலியாக உள்ளன

  IDBI Bank Recruitment 2022 - துணை மேலாளர் உள்பட 1544 பணியிடங்களுக்கு அழைப்பு!  

  5. இந்திய கடற்படையில் 127 காலியிடங்கள்: 

  இந்திய கடற்படையில் காலியாக உள்ள 127 பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. 26/06/2022 அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய கடற்படையில் 127 காலியிடங்கள்... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  6. EPFO நிறுவனத்தில் வேலை: 

  EPFO நிறுவனம் Programmer பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

  EPFO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க 

  விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
  சம்பள விவரம்ரூ.47,600.00-1,51,100.00/- மாதம் சம்பளம்
  கல்வித் தகுதி விவரம்B.E , B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
  பணியிடம்புது டெல்லி
  வயது தகுதி65 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

  மேற்படி பணிகளுக்கு, கடைசி நேரம் வரை  தாமதிக்காமல், உடனடியாக  விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Banking jobs, Jobs