வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், தேர்வுகள் குறித்த முழுவிவரங்களை இங்கே காணலாம்.
வேலை வாய்ப்பு:
1. பஞ்சாபி தேசிய வங்கி:
பஞ்சாப் தேசிய வங்கியில் Specialist Officers (SO) 145 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள ஆர்வலர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
PNB Job Alert | பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பம் செய்வது எப்படி, தகுதிகள் என்ன?
ஆன்லைன் மூலம் தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2022 மே 7 ஆகும்.
2. டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்:
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2022
TNPSC: 626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்- https://tnpsc.gov.in/Document/tamil/2022_10_CESE_tam.pdf
3. ரகசிய அதிகாரி:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப் பிரிவில் உதவி ரகசிய அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ACIO/II Tech Examination: உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்
பதவியின் பெயர்: உதவி ரகசிய அதிகாரி கிரேடு II - தொழிநுட்பம் சார்ந்த பணி (Assistant Central Inteligent officer- Grade II/Technical)
காலிப்பணியிடங்கள்: 150
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07-05-2022
4. பரோடா வங்கியில் : வேளாண் விற்பனை அதிகாரி பதவி
வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பரோடா வங்கி (Bank Of Baroda) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பரோடா வங்கியில் வேலை: வேளாண் விற்பனை அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: 26.04.2022 இரவு 11:59 மணி வரை.
5. உதவி கமாண்டன்ட் பதவி: மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன .
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 10/05/2022, மாலை 6 மணி
6. இந்திய பொருளாதார சேவை:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய பொருளாதார சேவை / இந்திய புள்ளியியல் சேவை எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//www.upsconline.nic.inஎன்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 26 -04-2022 (இரவு 06:00 மணி).
காலிப்பணியிடங்கள் | கடைசி நாள் |
2022 ஜேஇஇ முதன்மை தேர்வு (ஏப்ரல் அமர்வு) | 25.04.2020 |
பரோடா வங்கியில் : வேளாண் விற்பனை அதிகாரி பதவி | 26.04.2022 இரவு 11:59 மணி வரை |
ஆசிரியர் தகுதித் தேர்வு | 26.04.2022 |
யுபிஎஸ்சி இந்திய பொருளாதார சேவை | 28.04.2022 |
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு | 28.04.2022 |
பணியாளர் தேர்வாணையம் ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர், தேர்வு 2021 | 30.04.2022 |
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் | 03.05.2022 |
பஞ்சாப் தேசிய வங்கி சிறப்பு அதிகாரி பணி | 03.05.2022 |
CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு | 06-5-2022 |
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவி இரகசிய அதிகாரி பணி | 07-05-2022 |
உதவி கமாண்டன்ட் பதவி | 10/05/2022 |
கல்வி :
ஜேஇஇ முதன்மைத் தேர்வு
2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது.
2022 ஜேஇஇ முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு - தேசிய தேர்வு முகமை
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், " JEE (Main) 2022 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு/புதிதாகச் சமர்ப்பிப்பதற்கு, மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2020
CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு : மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை தொடங்கியது.
இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.
முன்னதாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தரவுகளை மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது. பெரும்பாலான விண்ணப்பங்கள் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுளளதாகவும், தென் மாநிலங்களில் விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாக உள்ளதென தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
மேலும், விவரங்களுக்கு: CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆசிரியர் தகுதித் தேர்வு: 2022 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.04.2022 ஆகும்.
TNTET Exam 2022: ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
இதற்கிடையே, பி.எட். இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (Diploma in Teacher Elucation) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் முன்னதாக தெரிவித்திருந்தது.
வேண்டுகோள்:
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrance Exam, Jee, Teacher, TNPSC, UPSC