Home /News /employment /

எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரூ.53,620 சம்பளம் - முழு விவரம்

எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரூ.53,620 சம்பளம் - முழு விவரம்

எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

lic recruitment 2022 apply online : இந்தியஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) வேலைகளுக்கு ஆன்லைனில் 25.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai | Tamil Nadu
    இந்திய (LIC) ஆயுள் காப்பீட்டு கழகம் கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Assistant பணிகளுக்கு 50 இடங்களும் , Assistant Manager பணிகளுக்கு 30 இடங்களும் காலியாக உள்ளன.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வயது  28-க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். கால அவகாசம் நிறைவடைய 4 நாட்களே மீதம் உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம்எல்.ஐ.சி(LIC)
    பணியின் பெயர்Assistant ,Assistant Manager
    காலியிடங்கள்

    Assistant -  50 காலியிடங்கள்

    Assistant Manager - 30 காலியிடங்கள்
    வயது வரம்பு21-லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும்
    சம்பளம்

    Assistant  - ரூ.22,730/

    Assistant Manager சம்பளம்: ரூ.53,620/
    விண்ணப்பிக்க கடைசி நாள்25.08.2022
    கல்வித்தகுதி

    Assistant - ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்ட படிப்பு 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Assistant Manager  - ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் இப்பணியில் DME பிரிவிற்கு 21-லிருந்து 40-க்குள் இருக்க வேண்டும். Marketing/Finance பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    தேர்ந்தெடுக்கப்படும் முறைதகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
    விண்ணப்பிக்கும் முறை www.lichousing.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 25.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
    விண்ணப்பக் கட்டணம்ரூ.800/- இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

    முக்கியத் தேதிகள் :



















    விண்ணப்பத்தின் தொடக்க தேதிஆகஸ்ட் 4, 2022
    விண்ணப்பத்தின் கடைசி தேதிஆகஸ்ட் 25, 2022
    ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை பெரும் நாட்கள்தேர்விற்கு 7-14 நாட்களுக்கு முன்னர் அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.
    ஆன்லைன் தேர்வுசெப்டம்பர் - அக்டோபர் 2022

    அறிவிப்பினை காண

    https://www.lichousing.com/static-assets/pdf/Assistant_Assistant_Manager_Recruitment_Detailed_Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms

    இந்த பக்கத்தில் சென்று காணவும்.

    LIC வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது சில எளிய வழிமுறைகள் :

    படி 1: LIC HFL - lichousing.com-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

    படி 2: முகப்புப் பக்கத்தில் ‘Careers’ டேப்பில் கிளிக் செய்யவும்.

    படி 3: அறிவிப்பின் கீழ் தெரியும் ‘Apply Online’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    படி 4: விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    படி 5: விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.

    படி 6: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஆட்சேர்ப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

    படி 7: விண்ணப்பதாரர்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துகொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி