எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள 590 பணியிடங்கள்!

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

news18
Updated: March 7, 2019, 8:11 PM IST
எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள 590 பணியிடங்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: March 7, 2019, 8:11 PM IST
ல்ஐசி நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer – AA0) பிரிவில் சுமார் 590 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு எல்ஐசி நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இந்த 590 பணியிடங்களில் AA0 – generalist பிரிவில் 350 இடங்களும், AA0 – IT பிரிவில் 150 இடங்களும், AA0 – CA பிரிவில் 50 இடங்களும், AA0 – Actuarial பிரிவில் 30 இடங்களும், AA0 – Rajbhasha பிரிவில் 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: 1-03-2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.      

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மார்ச் 22. எழுத்துத் தேர்வு உத்தேசமாக மே 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்க்கை பார்க்கவும்.

Loading...

Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...