எல்.ஐ.சி. துணை நிறுவனத்தில் 300 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

news18
Updated: August 30, 2018, 2:43 PM IST
எல்.ஐ.சி. துணை நிறுவனத்தில் 300 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 300 பணியிடங்கள்
news18
Updated: August 30, 2018, 2:43 PM IST
எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் துணை நிறுவனம்தான் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கான 100 இடங்களும், அசோசியேட் பணிக்கான 50 இடங்களும், அசிஸ்டென்ட் பணிக்கான 150 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1-1-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எம்.பி.ஏ. முடித்தவர்களும், எம்.பி.ஏ. உடன் குறிப்பிட்ட பிரிவு டிப்ளமா படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 500-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம்.

பிற விவரங்கள்: காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 6. மேலும் விவரங்களுக்கு http://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
First published: August 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...