ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வேயில் பல்வேறு காலியிடங்கள்; தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரயில்வேயில் பல்வேறு காலியிடங்கள்; தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railway jobs : இந்தியன் ரயில்வேவில் சாரணர்,சாரணியர் கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியன் ரயில்வேவின் தென் மேற்கு ரயில்வேவில் சாரணர்,சாரணியர் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலையில் உள்ள நிலை 1 மற்றும் நிலை 2 இல் பணியாற்ற விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பிரிவுகாலிப்பணியிடம்கோட்டா பிரிவு
  நிலை 23தென் மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலை
  நிலை 18ஹூப்பள்ளி,பெங்களூர் & மைசூர் பகுதி மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலை

  வயது வரம்பு:

  நிலை 2 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும்.

  நிலை 1 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 33 வயது வரை இருக்க வேண்டும்.

  கல்வித்தகுதி:

  பணிதகுதி
  நிலை 2 பணி12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி முடித்திருக்க வேண்டும்
  நிலை 1 பணி10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ஐடிஐ/தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

  சாரணர், சாரணியர் தகுதி:

  சாரணர் மற்றும் சாரணியர் குழுவில் 5 வருடம் இருந்து பணி செய்திருக்க வேண்டும். மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.rrchubli.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை கையில் பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தேர்வு கட்டணமாக SC/ST/Ex-Servicemen/PwBDs/EBC ரூ.250/- மற்றும் இதர பிரிவினர் ரூ.500/- ஐஓபி முறையில் Asst. Personnel Officer/Rectt., South Western Railway, Hubli என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

  Also Read :தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மாணவர்களுக்குச் சம்பளத்துடன் தொழிற்பயிற்சி.. எப்படி விண்ணப்பிப்பது?

  நிலை 2 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM’s Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.

  நிலை 1 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM’s Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் :

  இரண்டு நிலை பணிகளுக்கு விண்ணப்பங்கள் 19.12.2022 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலம் வந்து சேர வேண்டும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Indian Railways, Railway Jobs