ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய தேசிய புலனாய்வு முகமையில் சட்டப்பிரிவில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய தேசிய புலனாய்வு முகமையில் சட்டப்பிரிவில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய தேசிய புலனாய்வு முகமையில் சட்டப்பிரிவில் வேலை

மத்திய தேசிய புலனாய்வு முகமையில் சட்டப்பிரிவில் வேலை

NIA jobs : மத்திய அரசின் தேசிய புலனாய்வு பிரிவில் சட்டப்பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு செய்தி வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் தேசிய புலனாய்வு பிரிவில் சட்டப்பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்வயது
  Deputy Legal Advisor3ரூ.78,800 - 2,09,200/-அதிகபட்சம் 56 ஆண்டுகள்
  Senior Public Prosecutor6ரூ.67,700 - 2,08,700/-அதிகபட்சம் 56 ஆண்டுகள்

  பணிக்கான கல்வித்தகுதி:

  Deputy Legal Advisor பணிக்குச் சட்டப்படிப்பில் இளங்கலை மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  Senior Public Prosecutor பணிக்குச் சட்டப்படிப்பில் இளங்கலை மற்றும் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பதாரின் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் NIA இணையத்தளத்தில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி :  https://nia.gov.in/recruitment-notice.htm

  Also Read : 6503 ரேஷன் கடை காலியிடங்கள்: இன்றே கடைசி நாள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

  விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  SP (Adm),NIA HQ,Opposite CGO Complex,

  Lodhi Road,New Delhi - 110003.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 28.11.2022. 

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs