Home /News /employment /

தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் வேலை - விண்ணப்பிக்க 6ம் தேதி கடைசி நாள்

தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் வேலை - விண்ணப்பிக்க 6ம் தேதி கடைசி நாள்

தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் வேலை

தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் வேலை

விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ் நகல்களுடன் 06.09.2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தென்காசி அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தென்காசி மாவட்டம், ரெட்டியார்பட்டி அரசினர் குழந்தைகள் இல்ல சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கப்பட்டுள்ளது.

    இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் ஆணை பெற்ற நபர்கள், தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளிநகலுடன் 06.09.2022 க்குள் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    வேலைக்கான விவரங்கள் :































    நிறுவனம் / அமைப்பின் பெயர்அரசு குழந்தைகள் இல்லம்
    பதவிகளின் பெயர்ஆலோசகர் பணி
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி06.09.2022
    தேர்வு செய்யப்படும் முறைநேர்முகத் தேர்வு
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ.), 14, பெருமாள் கோவில் தெரு, தென்காசி - 627811.
    சம்பள விவரம்ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- வழங்கப்படும்.

    பதவிக்கு தகுதியான ஆற்றுப்படுத்துநர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் (வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- வழங்கப்படும்.

    விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ் நகல்களுடன் 06.09.2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி