• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசு வேலை

தமிழக அரசு வேலை

விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றிதழ் , தொழில் நுட்ப பயிற்சி சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 25.10.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    தமிழக அரசு சுகாதாரத்துறையின் கீழ் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் , ஆய்வுக் கூட நுட்புணர் பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், கல்வி தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் TN Govt
    வேலையின் பெயர் Lab Supervisor & Lab Technician
    காலிப்பணி இடங்கள் 07காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வயது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021
    கல்வி தகுதி











    Lab Supervisor DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    Lab Technician DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம்
    முகவரி துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய் )
    சமுதாய கூடம் , ஈரோடு மணிநகரம்
    மாவட்ட காசநோய் மையம் விருதுநகர்.-626001
    விண்ணப்ப கட்டணம் கட்டணம் தேவை இல்லை

    காலிப்பணியிட விவரம் :

    • முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - 2 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆய்வுக் கூட நுட்புணர் - 5 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் கல்வித் தகுதி:

    அடிப்படை தகுதி :

    • +2வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக் கூட நுட்புணர் படிப்பு அல்லது சான்றிதழ்.

    • ஆய்வுக் கூடத்தில் குறைந்தது இரண்டு வருஷ முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

    • இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.


    ஆய்வுக் கூட நுட்புணர் கல்வித் தகுதி :

    அடிப்படை தகுதி :

    +2வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக் கூட நுட்புணர் படிப்பு அல்லது சான்றிதழ்.

    முன்னுரிமை தகுதி :

    காசநோய் பரிசோதனையில் ஒருவருட முன் அனுபவம்

    முக்கிய குறிப்பு : விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் நேர்முகத்தேர்வுக்கு சொந்த செலவிலும் வரவேண்டும்

    விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றிதழ் , தொழில் நுட்ப பயிற்சி சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 25.10.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய் )
    சமுதாய கூடம் , ஈரோடு மணிநகரம்
    மாவட்ட காசநோய் மையம் விருதுநகர்.

    விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரை குறிப்பிட்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும்.

    அறிவிப்பு விவரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: