அரசு ஆரம்ப சுகாதாரா நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ அலுவலர் (Dental Surgeon), பல் மருத்துவ அலுவலர் (Dental Assistant) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை கோயம்பத்தூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
பதவி | பல் மருத்துவ அலுவலர் (Dental Surgeon)பல் மருத்துவ அலுவலர் (Dental Assistant) |
பல் மருத்துவ அலுவலர் - 8பல் மருத்துவ உதவியாளர் - 7 | |
சம்பளம் (தொகுப்பூதியம்) | பல் மருத்துவ அலுவலர் - ரூ.34,000/பல் மருத்துவ உதவியாளர் - ரூ. 13,800/ |
கல்வித் தகுதி | பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bds பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Tamil Nadu Dental Council -ல் பதிவு செய்திருக்க வேண்டும்.பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு | 35 -க்குள் இருக்க வேண்டும் வேண்டும் |
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 05.12 2022 அன்று மாலை 5 மணிக்குள் பந்தையசாலையில் உள்ள துணை இயக்குநர்: சுகாதாரபணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
இதையும் வாசிக்க: பிசினஸ் தொடங்குற ப்ளானா.? கொட்டிக்கிடக்கு வாய்ப்பு.. ஈசியா தொழில் தொடங்க முக்கிய தகவல்!
இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 2 தேதி காலை 10 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.