திருப்பூர் மாவட்ட சுகாதாரச்சங்கத்தின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
ஆய்வுகூட நுட்புனர் | 4 | ரூ.13,000/- |
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆய்வுக்கூட பயிற்சி சான்றிதழ் மற்றும் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
சுய விவரங்களுடன் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து ரூ.25/- அஞ்சல் தலை ஒட்டி தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம் - அறை எண் - 1
கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்
அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்)
திருப்பூர் மாவட்டம் - 641604.
Also Read : SSC குருப்-சி தேர்வுக்கான இலவச பயிற்சி - சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள்:
அறை எண்: 120
முதல் தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
பல்லடம் ரோடு
திருப்பூர் - 641604.
நாள் : 20.12.2022 காலை 10.30
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tiruppur