முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 காலிப்பணியிடங்கள்..விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 காலிப்பணியிடங்கள்..விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ளது.

அரசு மருத்துவமனையில் வேலை

அரசு மருத்துவமனையில் வேலை

TN job alert : மருத்துவக் கல்வி இயக்குநரகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவக் கல்வி இயக்குநரகம், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ள 31 காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2
காலிப்பணியிடங்கள்31
வயது18 வயதில் இருந்து 59 வயது வரை இருக்க வேண்டும்
சம்பளம்ரூ.15,000/-

கல்வித்தகுதி:

மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் படிப்பு - DMLT (இரண்டு ஆண்டுகள்) அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று பெற்ற கல்வித் தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியான விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.

Also Read : தமிழக மாவட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பெண்களுக்கு வேலை...விவரங்கள் இதோ..!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்களின் நகல்களில் அனைத்தையும் இணைத்து சுயவிவரங்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக அனுப்பலாம். நேரில் சென்றும் கொடுக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி : mesectiongmctpr@gmail.com

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி,

திருப்பூர் மாவட்டம் - 641 608.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.11.2022 மாலை 05.00 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Govt hospitals, Jobs, Tamil Nadu Government Jobs