கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவகால ஆய்வு கூட இரசாயனர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேதியியலில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.7,400 முதல் ரூ.13,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | கல்வி |
ஆய்வு கூட இரசாயனர் (பருவகாலம்) | 3 | வேதியியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம். |
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ஆய்வு கூட இரசாயனர் பணிகளுக்கு ரூ.7,400 முதல் ரூ.13,100 வரை சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர் பணி.. விவரம் இதோ..
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள பட்டதாரிகள் சுய விவரங்கள், அனுபவ விவரங்கள் மற்றும் தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து ஆலைக்குத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மூங்கில்துறைப்பட்டு - 605 702, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.01.2023.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment news, Jobs, Kallakurichi