ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்.. ரூ.2,09,200/- வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்..

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்.. ரூ.2,09,200/- வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்..

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா

மத்திய அரசின் நாடு முழுவதும் உள்ள 1252 கேந்திரிய வித்யாலயாவில் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 13,404 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் நாடு முழுவதும் உள்ள 1252 கேந்திரிய வித்யாலயாவில் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 13,404 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதலே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சில நிர்வாக கோளாறு காரணமாக சில மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான காரணங்கள் கீழ் வருமாறு.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயதுசம்பளம்
ASSISTANT COMMISSIONER5250ரூ.78,800-2,09,200/-
PRINCIPAL23935ரூ.78,800-2,09,200/-
VICE PRINCIPAL20335-45ரூ.56,100-1,77,500/-
POST GRADUATE TEACHER140940ரூ.47,600-1,51,100/-
TRAINED GRADUATE TEACHER317635ரூ.44,900-1,42,400/-
LIBRARIAN35535ரூ.44,900-1,42,400/-
PRIMARY TEACHER (MUSIC)30330ரூ.35,400-1,12,400/-
FINANCE OFFICER635ரூ.44,900-1,42,400/-
ASSISTANT ENGINEEER (CIVIL)0235ரூ. 44,900-1,42,400/-
ASSISTANT SECTION OFFICER15635ரூ.35,400-1,12,400/-
HINDI TRANSLATOR1135ரூ.35,400-1,12,400/-
SENIOR SECRETARIAT ASSISTANT32230ரூ.25,500-81,100/-
JUNIOR SECRETARIAT ASSISTANT70227ரூ.25,500-81,100/-
STENOGRAPHER GRADE - II5427ரூ.19,900-63,200/-
PRIMARY TEACHER641430ரூ.35,400-1,12,400/-

Also Read : கல்வித்துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு..கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள்.. தகுதிக்கேற்ற பல்வேறு பதவிகள்..!

தேர்வு கட்டணம்:

பதவியின் பெயர்கட்டணம்
ASSISTANT COMMISSIONERரூ.2,300/-
PRINCIPALரூ.2,300/-
VICE PRINCIPALரூ.2,300/-
POST GRADUATE TEACHERரூ.1,500/-
TRAINED GRADUATE TEACHERரூ.1,500/-
LIBRARIANரூ.1,500/-
PRIMARY TEACHER (MUSIC)ரூ.1,500/-
FINANCE OFFICERரூ.1,500/-
ASSISTANT ENGINEEER (CIVIL)ரூ.1,500/-
ASSISTANT SECTION OFFICERரூ.1,500/-
HINDI TRANSLATORரூ.1,500/-
SENIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
JUNIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
STENOGRAPHER GRADE - IIரூ.1,200/-
PRIMARY TEACHERரூ.1,500/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

உதவி ஆணையர் பணி,பள்ளி முதல்வர்,துணை பள்ளி முதல்வர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/

முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/

தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதன்மை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/

நூலக அலுவலகர் மற்றும் இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/

Also Read : கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள் : ரூ.2,09,200 வரை சம்பளம்.. கல்வித்தகுதி என்ன? - முழு விவரம்

குறிப்புகள் :

SC/ST/PH and ExServicemen பிரிவினர் எந்தவித தேர்வு கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு சரியான இமெயில் மற்றும் தொலைப்பேசி எண் தேவை. குறுச்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படும். விண்ணப்பிக்க தொடங்குவதற்கு முன்பு சான்றிதழ்கள், புகைப்படம், டிஜிட்டல் கையொப்பம் போன்றவற்றை தயாராக வைத்துக்கொண்டு பதிவு செய்யவும்.

அதே போல், விண்ணப்பத்தை முடித்தவுடன் பதிவிறக்க செய்துக்கொண்டு அதனுடன் புகைப்படத்தை இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நேர்காணல் செல்லும் போது அதனை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Central Government Jobs, Education department, Kendriya vidyalaya, Teaching