ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2,09,200 வரை சம்பளம்.. மத்திய அரசின் பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ரூ.2,09,200 வரை சம்பளம்.. மத்திய அரசின் பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் கேந்திரிய வித்யாலயாவில் 25 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1252 பள்ளிகள் செயல்படுகின்றன.  அதில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி தற்போது விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி விட்டது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயதுசம்பளம்
ASSISTANT COMMISSIONER5250ரூ.78,800-2,09,200/-
PRINCIPAL23935ரூ.78,800-2,09,200/-
VICE PRINCIPAL20335-45ரூ.56,100-1,77,500/-
POST GRADUATE TEACHER140940ரூ.47,600-1,51,100/-
TRAINED GRADUATE TEACHER317635ரூ.44,900-1,42,400/-
LIBRARIAN35535ரூ.44,900-1,42,400/-
PRIMARY TEACHER (MUSIC)30330ரூ.35,400-1,12,400/-
FINANCE OFFICER635ரூ.44,900-1,42,400/-
ASSISTANT ENGINEEER (CIVIL)0235ரூ. 44,900-1,42,400/-
ASSISTANT SECTION OFFICER15635ரூ.35,400-1,12,400/-
HINDI TRANSLATOR1135ரூ.35,400-1,12,400/-
SENIOR SECRETARIAT ASSISTANT32230ரூ.25,500-81,100/-
JUNIOR SECRETARIAT ASSISTANT70227ரூ.25,500-81,100/-
STENOGRAPHER GRADE - II5427ரூ.19,900-63,200/-
PRIMARY TEACHER641430ரூ.35,400-1,12,400/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். Assistant

Section Officer, Senior Secretariat Assistant, Stenographer Grade-II மற்றும் Junior Secretariat Assistant பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது.

தேர்வு கட்டணம்:

பதவியின் பெயர்கட்டணம்
ASSISTANT COMMISSIONERரூ.2,300/-
PRINCIPALரூ.2,300/-
VICE PRINCIPALரூ.2,300/-
POST GRADUATE TEACHERரூ.1,500/-
TRAINED GRADUATE TEACHERரூ.1,500/-
LIBRARIANரூ.1,500/-
PRIMARY TEACHER (MUSIC)ரூ.1,500/-
FINANCE OFFICERரூ.1,500/-
ASSISTANT ENGINEEER (CIVIL)ரூ.1,500/-
ASSISTANT SECTION OFFICERரூ.1,500/-
HINDI TRANSLATORரூ.1,500/-
SENIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
JUNIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
STENOGRAPHER GRADE - IIரூ.1,200/-
PRIMARY TEACHERரூ.1,500/-

Also Read : மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் : என்.எல்.சியில் 213 பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வித்தகுதி:

பணியின் பெயர் மற்றும் கல்வித்தகுதி:

உதவி ஆணையர் பணி:

45% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். கல்வித்துறையில் முதல்வராக அல்லது தலைமை ஆசிரியராக சிபிசி 7வது நிலை 12வது சம்பளத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அனுபவம் தேவை. மேலும் கணினி பற்றிய அறிவு தேவை.

பள்ளி முதல்வர்:

45% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். சிபிசி 7 வது நிலை 12வது சம்பளத்தில் முதல்வராக அல்லது துணை முதல்வர்/ உதவி கல்வி அலுவலராகச் சம்பள அளவு 10 படி பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது விரிவுரையாளராகச் சம்பள அளவு 8 படி பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது சம்பள அளவு 7 மற்றும் 8 படி TGT மற்றும் PGT இணைத்து 15 வருட அனுபவம் தேவை. கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.

துணை பள்ளி முதல்வர்:

50% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். துணை முதல்வராக 2 வருடப் பணி அனுபவம் தேவை. PGT அல்லது விரிவுரையாளராக 6 வருட அனுபவம் அல்லது PGT மற்றும் விரிவுரையாளர் இணைந்து 10 ஆண்டுகள் அனுபவம். கணினி உபயோகம் எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் :

ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகம், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பம் பிரிவுகளில் முதுகலை ஆசிரியர் பணிகள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

50% மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடப்பிரிவுக்கு ஏற்ற முதுகலைப் பட்டம் தேவை. மேலும் B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி தேவை. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் வழிக் கல்வியில் கற்பித்தல் திறன் வேண்டும். கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் : கணினி அறிவியல்

50% சதவீதம் மதிப்பெண்களுடன் B.E or B.Tech (Computer Science/ IT) அல்லது ஏதாவது பிரிவில் B.E or B.Tech மற்றும் கணினியில் முதுகலை டிப்ளமோ அல்லது M.Sc. (Computer Science)/ MCA அல்லது B.Sc. (Computer Science) / BCA அல்லது கணினியில் முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலைப் பட்டம்.

அல்லது பி-லேவல் DOEACC மற்றும் முதுகலைப் பட்டம் அல்லது சி-லேவல் DOEACC மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் படிப்பு. மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தேவை. B.Ed படிப்பு பதவி உயர்வுகளுக்கு உதவியாக இருக்கும்.

முதுகலை ஆசிரியர் : உயிர் தொழில்நுட்பம்

50% சதவீதம் மதிப்பெண்களுடன் Bio-Technology/Genetics/Micro Biology/Life Science/Bio-Science/Bio-Chemistry பிரிவுகளில் முதுகலைப்பட்டம்.ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தேவை.B.Ed படிப்பு பதவி உயர்வுகளுக்கு உதவியாக இருக்கும்.

தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:

ஆங்கிலம், ஹிந்தி, சமூக அறிவியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், உடற்கல்வி, கலைக்கல்வி, வேலை அனுபவம் பணிகள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாட ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட மொழி சார்ந்த இளங்கலை படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக அறிவியல் பாட ஆசிரியருக்கு வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் பாடங்கள் கொண்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் வரலாறு மற்றும் புவியியல் கண்டிப்பாகத் தேவை.

அறிவியல் பாட ஆசிரியருக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல் கொண்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணித ஆசிரியருக்குக் கணிதத்தில் இளங்கலை பட்டம் மற்றும் இயற்பியல், வேதியியல், எலக்டரானிக்ஸ், கணினி அறிவியல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CTET) Paper-II தேர்ச்சி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பித்தல் திறன் தேவை.

உடற்கல்வி ஆசிரியருக்கு உடற்கல்வி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலைக்கல்வி ஆசிரியருக்கு Drawing and Painting/Sculpture/ Graphic Art போன்ற பிரிவில் 5 வருட டிப்ளமோ அல்லது இணைய டிகிரி.

வேலை அனுபவம் பிரிவு ஆசிரியருக்கு Electrical பிரிவில் 3 வருட டிப்ளமோ.Electrical அல்லது Electronics Engineering பாடத்தில் டிகிரி. மேலும் ஒரு வருட அனுபவம்.

Also Read : ரூ.35,000 வரை சம்பளம்... இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நூலக அலுவலகர்:

Library Science பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 1 வருட டிப்ளமோ.

முதன்மை ஆசிரியர் (இசை):

50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசையில் இளங்கலை பட்டம். டிப்ளமோ படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

நிதி அதிகாரி :

50% சதவீதத்துடன் B.Com மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம் அல்லது M.Com 3 வருட அனுபவம் அல்லது CA (Inter)/ICWA (Inter)/MBA (Finance)/PGDM (Finance) மற்றும் 2 வருட அனுபவம்.

உதவிப் பொறியாளர் (சிவில்):

Civil Engineering தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம் அல்லது 3 வருட டிப்ளமோ மற்றும் 5 வருட அனுபவம்.

உதவி பிரிவு அதிகாரி:

பட்டப்படிப்பு மற்றும் 3 வருட அனுபவம் தேவை.

இந்தி மொழிபெயர்ப்பாளர்:

ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த முதுகலைப்பட்டம் அல்லது டிப்ளமோ மற்றும் இரண்டு ஆண்டுகள் அனுபவம்.

மூத்த உதவி செயலாளர்:

பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.

ஸ்டெனோகிராஃபர் கிரேடு - II:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறன் தேர்வு நடைபெறும்.

ஜூனியர் உதவி செயலாளர்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேவை ஹிந்தி மொழி தேவை.

முதன்மை ஆசிரியர் :

50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட டிப்ளமோ அல்லது 4 வருட டிகிரி மற்றும் Central Teacher Eligibility Test (Paper-I) தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://kvsangathan.nic.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022 இரவு 12 மணி வரை.

First published:

Tags: Central Government Jobs, Teaching