மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 6,414 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களும் அடங்கும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் :
பதவியின் பெயர் | காலியிடங்கள் | அதிகபட்ச வயது | சம்பளம் |
உதவி ஆணையர் | 52 | 50 | ரூ.78,800-2,09,200/- |
பள்ளி முதல்வர், | 239 | 35 | ரூ.78,800-2,09,200/- |
துணை முதல்வர் | 203 | 35-45 | ரூ.56,100-1,77,500/- |
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் | 1409 | 40 | ரூ.47,600-1,51,100/- |
பட்டதாரி ஆசிரியர் | 3176 | 35 | ரூ.44,900-1,42,400/- |
நூலகர் | 355 | 35 | ரூ.44,900-1,42,400/- |
தொடக்க கல்வி ஆசிரியர் (இசை) | 303 | 30 | ரூ.35,400-1,12,400/- |
நிதி அலுவலர் | 6 | 35 | ரூ.44,900-1,42,400/- |
உதவி பொறியாளர் (CIVIL) | 02 | 35 | ரூ. 44,900-1,42,400/- |
உதவி செக்சன் அலுவலர் | 156 | 35 | ரூ.35,400-1,12,400/- |
இந்தி மொழிபெயயர்ப்பாளர் | 11 | 35 | ரூ.35,400-1,12,400/- |
முதுநிலை செயலக உதவியாளர் | 322 | 30 | ரூ.25,500-81,100/- |
இளநிலை செயலக உதவியாளர் | 702 | 27 | ரூ.25,500-81,100/- |
சுருக்கெழுத்தார் நிலை - II | 54 | 27 | ரூ.19,900-63,200/- |
தொடக்கக்கலவி ஆசிரியர் (சிடெட் தேர்வு தாள் - I தேர்ச்சி ) | 6414 | 30 | ரூ.35,400-1,12,400/- |
அனைத்து பதவிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
இதையும் வாசிக்க: கேந்திரிய வித்யாலயா பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கூறிய பதவிகளுக்கு, கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவர். உதவி செக்சன் அலுவலர், இளநிலை மற்றும் முதுநிலை செயலக உதவியாளர், சுருக்கெழுத்தார் நிலை - II Junior Secretariat Assistant பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
டிசம்பர் 26ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்
இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
உதவி ஆணையர் பணி,பள்ளி முதல்வர்,துணை பள்ளி முதல்வர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/
முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/
பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.