ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர் வைசியா வங்கியில் வேலை

கரூர் வைசியா வங்கியில் வேலை

Karur Vysya Bank Recruitment 2022 : கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Sales & Service Associates பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 30/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூர் வைஸ்யா வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.kvb.co.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  கரூர் வைஸ்யா வங்கி வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைகரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank)
  பணியிட விவரம்விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்
  பணிகள்Sales & Service Associates
  விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
  சம்பள விவரம்ரூ.15,000 to 18,000/-
  கல்வித் தகுதி விவரம்Under Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
  பிற தகுதிகள்Under Graduate Degree 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
  வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 31.03.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மொத்த காலிப்பணியிட விவரம்பல  காலியிடங்கள் உள்ளன.
  விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

  கரூர் வைஸ்யா வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • வங்கியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
  • https://www.kvb.co.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவேண்டும்.
  • Recruitment of Sales & Service Associates (on contract) என்ற விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • அறிவிப்பினை படித்த பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்..
  • 30/06/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://www.kvb.co.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://www.karurvysyabank.co.in/Careers/Instructions.pdf

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy, Karur vyshya bank