Home /News /employment /

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பு 2021

அரசு வேலைவாய்ப்பு 2021

Kanyakumari DHS Recruitment 2021 : விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டா மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிகள் அனைத்து சான்றிதழ்களில் ( கல்வி சான்றிதழ்கள் , குடும்ப அட்டை , சாதிச் சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , ஆதார் அட்டை , பான் கார்டு , கணினி சான்றிதழ் , முன் அனுபவ சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    கன்னியாகுமாரி மாவட்ட சுகாதார சங்கம் - தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக்கூடியவை.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் - கன்னியாகுமரி
    வேலையின் பெயர் உதவியாளர் மற்றும் DEO
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 17
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு (Interview/Written Exam) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடுகின்றது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 12வது, பட்டம் / பி.பார்ம், டிஎம்எல்டி, எம்பிஏ, பிஜி டிப்ளமோ, எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கீழே முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்கும் முறை :

    • விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டா மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிகள் அனைத்து சான்றிதழ்களில் ( கல்வி சான்றிதழ்கள் , குடும்ப அட்டை , சாதிச் சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , ஆதார் அட்டை , பான் கார்டு , கணினி சான்றிதழ் , முன் அனுபவ சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

    • விண்ணப்பதாரர் அனைத்து சான்றிதழ்களிலும் A /B நிலையில் உள்ள அலுவலரிடம் ATTESTED பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

    • வயது வரம்பு 01.12.2021 அன்று 40க்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.

    • தபால் உரையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    • இதனுடன் ரூபாய் 25/- மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.

    • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.12.2021 அன்று 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

    • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த செலவில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

    • தேர்ந்தெடுக்கப் பட்ட விண்ணப்பதாரர்கள் குமாரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.

    • கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : தேர்வு குழு , மாவட்ட சுகாதார சங்கம் , NTEP , மாவட்ட நெஞ்சக நோய் மையம் , கன்னியாகுமாரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் , ஆசாரிபள்ளம் - 629 201 , கன்னியாகுமாரி மாவட்டம்.


     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி