ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அணிகலன் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ. 1லட்சம் பரிசு அறிவித்த கல்யாண் ஜுவல்லர்ஸ்

அணிகலன் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ. 1லட்சம் பரிசு அறிவித்த கல்யாண் ஜுவல்லர்ஸ்

காட்சிப் படம்

காட்சிப் படம்

கல்யான் ஜுவல்லர்ஸ் அணிகலன் வடிவமைப்புக்கான போட்டியை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெக்லஸ், வளையல், காதணி உள்ளிட்ட அணிகலன்களுக்கான வடிவமைப்புப் போட்டியை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியின் மையக் கருத்து மயில் ஆகும்.

  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஜூலை 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜுலை  17ம் தேதி முதல் ஜுலை 7ம் தேதி வரை  தங்கள் வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம்.

  சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வமா? ரூ.1 கோடி வரை மானியம்

  வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படும். முதல் இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பு பரிசாக வழங்கப்படும். மேலும், நிறுவனத்தில் மூன்று மாதம் உள்ளுரைப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Tnusrb Recruitment: காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

  https://www.candere.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  Published by:Salanraj R
  First published: