ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு - கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை..முழு விவரம் இதோ!

மத்திய அரசின் வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு - கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை..முழு விவரம் இதோ!

வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு

வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘பேங்க் நோட் பிரஸ்’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘பேங்க் நோட் பிரஸ்’என்ற நிறுவனம் வங்கிகளுக்கு நோட்டுகளை அச்சிடும் பணியில் உள்ளனர். அதில் தற்போது உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  நோட்டு அச்சகத்தில் பணி விவரங்கள்:

  பணிஜூனியர் டெக்னீசியன் (பிரிண்ட்டிங்)
  காலியாக உள்ள இடங்கள் 14 இடங்கள்
  காலியிடங்களை நிரப்பும் பிரிவுபொது - 10, பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பு-1, எஸ்சி-1,எஸ்டி-1, இதர பின் தங்கிய வகுப்பு - 1, மாற்றுதிறனாளி-1.
  வயது18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது
  சம்பளம்ரூபாய். 18,780 முதல் 67,390 வரை

  பணிக்கான கல்வித்தகுதி:

  லித்தோ ஆப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர், ஆப்செட் பிரின்டிவ், பிளேட் மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிவ் பிரிவில் ஐடிஐ அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ள்மோ முடித்திருக்க வேண்டும்.

  கல்வி தகுதி

  விண்ணப்பிக்கும் முறை:

  • பணிக்கான எழுத்துத் தேர்வு ஆன்லையில் நடைபெறும், பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
  • ஆன்லைனில் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
  • www.bnpdewas.spmcil.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணம்:

  • ரூபாய் 600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்சி பிரிவினருக்கு ரூபாய் 200 மட்டும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
  • விண்ணத்த  பின்பு ஆன்லைனில் தேர்வு எழுவதற்காகக் கால் லெட்டர் வரும், அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் குறிப்பிட்ட நாளில் தேர்வு எழுத வேண்டும்.

  முக்கிய தேதிகள்:

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14.11.2022

  ஆன்லையின் தேர்வு : டிசம்பர் -2022 /ஜனவரி - 2023 மாதங்களில் நடத்தப்படும்.

  Also Read : தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: 1284 காலிபணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

  தேர்வு முறை :

  ஆன்லையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் கேள்வித் தாள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

  தேர்வு முறை

  தேர்வு மையங்கள்:

  ஆந்திரா, பீகார், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படும்.

  தேர்வு மையங்கள்

  மேலும் விவரங்களுக்கு www.bnpdewas.spmcil.com இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs