Home /News /employment /

டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிக்கு 835 காலியிடங்கள் : இன்றே விண்ணப்பியுங்கள்

டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிக்கு 835 காலியிடங்கள் : இன்றே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • Last Updated :
    ssc.nic.in 2022 : டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) விண்ணப்ப செயல்முறை வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, கடைசி நாள் வரை தாமதிக்காமல், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

    காலியிடங்கள் : 835

    ஆண்கள் பிரிவில் 559 இடங்களும், பெண்கள் பிரிவில் 276 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 16-6-2022.

    காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    முக்கியமான நாட்கள்:

    ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகும் நாள் : மே 17

    விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : ஜூன் 16

    எழுத்துத் தேர்வு : உத்தேசமாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    தெரிவு செய்யப்படும் முறை: உடல்தகுதித் தேர்வு, தட்டச்சு தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

    இதையும் வாசிக்க:  14 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்

    வயது வரம்பு: குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.இதையம்ம

    இதையும் வாசிக்க:   ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு.. 4000 பெண்கள் தகுதி

    கல்வித் தகுதி: 10, +2 பாடத் திட்ட முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    சம்பளம்: ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

    ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

    Head Constable (Ministerial) in Delhi Police Examination, 2022
    Published by:Salanraj R
    First published:

    Tags: SSC

    அடுத்த செய்தி