தமிழக வனத்துறையில் மாதம் ரூ. 75 ஆயிரம் கிடைக்கும் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியுடையவர் நீங்கள் என்றால் உடனே அப்ளை பண்ணுங்க.
ஒரு சில அரிதான படிப்புகளுக்கு தேவை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழல் வனத்துறை பணியிடத்திற்கு உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்கள் நிரப்ப உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்கள் –
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Legal Advisor பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்
கல்வித் தகுதி –
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master of Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தபட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது,
இதையும் படிங்க - BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
அதாவது Environment, Forest and Climate Change – சுற்றுச் சூழல் , வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறையில் 5 ஆண்டுகால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விபரம் –
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை –
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தகவல்களை பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
Environment, Climate Change and Forest Department, Secretariat, Chennai-9.
இதையும் படிங்க - தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் வேலை
என்ற முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.06.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Jobs