ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்!

மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்!

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) வேலைவாய்ப்பு

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) வேலைவாய்ப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) பல்வேறு பிரிவுகளில் 864 இடங்கள் காலியாகவுள்ளது. அதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி) பணி விவரங்கள்:

  பணிஇன்ஜினியர் எக்சிகியூட்டிவ் (இ.இ) பதவி.
  காலியாக உள்ள இடங்கள்864 இடங்கள்
  வயது27 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
  சம்பளம்ரூபாய். 40,000 முதல் 1,40,000 வரை.

  இன்ஜினியர் எக்சிகியூட்டிவ் (இ.இ) பதவிக்கான கல்வித்தகுதி:

  எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தது 65% மதிப்பெண்ணுடன் (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 55%) பி.இ முடித்திருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக GATE 2022 நுழைவுத்தேர்வு எழுதியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பணிக்கான தேர்ச்சி நடைபெறும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு வருடப் பயிற்சிக்குப் பின்பு பணியில் நியமிக்கப்படுவர்.
  • careers.ntpc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பக் கட்டணம்:

  விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூபாய் 300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் மற்றும் வங்கிக் கணக்கில் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது.

  Also Read : மத்திய அரசின் வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு - கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை..முழு விவரம் இதோ!

  GATE 2022 தேர்வு விவரம்:

  முக்கிய தேதிகள்:

  விண்ணப்பம் தொடக்க நாள் : 28.10.2022

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.11.2022

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Thermal power plants