ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தியாகராஜ சுவாமி கோவிலில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

தியாகராஜ சுவாமி கோவிலில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

தியாகராஜ சுவாமி கோவில்

தியாகராஜ சுவாமி கோவில்

TN job alert : இந்து அறநிலையத்துறைக்குக் கீழ் செயல்படும் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்து அறநிலையத்துறைக்குக் கீழ் செயல்படும் திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்தகுதி
  ஓட்டுநர்1ரூ.18,500-58600/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
  தபேதார்1ரூ.15,900-50,400/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி
  உதவி மின் பணியாளர்1ரூ.16,600-52,400/-எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
  வேதபாராணம்1ரூ.15,700-50,000/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  காவலர்2ரூ.15,900-50,400/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  உதவி சுயம்பாகம்2ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  உதவி பரிச்சாரகம்1ரூ.10,000-31500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  சமையலர்1ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
  சமையல் உதவியாளர்1ரூ.6,900-21,500/-எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  துப்புரவாளர்1ரூ.4,200-12,900/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  இப்பணிக்கான வயது வரம்பு :

  குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://hrce.tn.gov.in/resources/docs

  தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

  உதவி ஆணையர் /செயல் அலுவலர்.

  அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை - 19.

  Also Read : ரயில்வே பணிக்கான தேர்வு முடிவுகள் : இன்று வெளியானது கால அட்டவணை

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. (தேதிக்குள் விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs