8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை..

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை..

கோப்புப் படம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இன்றும்  நாளையும்  நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக காலிப்பணியிடங்கள்:

  பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

   வயது வரம்பு:

  01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

   மாத ஊதியம்:

  பருவ கால பட்டியல் எழுத்தர் – ரூ.2410 + DA
  பருவ கால காவலர் – ரூ.2359 + DA

   கல்வி தகுதி:
  பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். பருவ கால காவலர் – 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  தேர்வு செயல் முறை:

  விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது இன்றும் முதல் நாளையும் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  தமிழ்நாட்டில் அரசு வேலைகளைத் தேடும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

  முகவரி:

  மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு, பலவன்சாத்துக்குப்பம், வேலூர் – 632001.

  மேலு படிக்க...யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020.. தேர்வு கிடையாது.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்..

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: