மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவன பணிக்கான விவரங்கள்:
பணியின் பெயர் | Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level |
காலியிடங்கள் | Engraver - 2 / Junior Office Assistant - 1 |
வயது வரம்பு | 18 இல் இருந்து 28 வயது வரை இருக்க வேண்டும். |
பணிக்கான கல்வித்தகுதி:
Engraver பணிக்காக Fine Arts பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Office Assistant பணிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு.
சம்பள விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Engraver | ரூ. 23,910/- முதல் ரூ.85,570/- வரை |
Junior Office Assistant | ரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை |
தேர்வு செய்யப்படும் முறை:
Junior Office Assistant பணிக்குத் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
Engraver பணிக்கு எழுதித் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனின் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://igmmumbai.spmcil.com/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2022.
விண்ணப்பிக்க கட்டணம் :
ஆன்லைனின் விண்ணப்பிக்க UR/OBC/EWS - ரூ.600/-
SC/ST/PWD - ரூ.200/-
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs, Mint