Home /News /employment /

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4

பொறியியல் பட்டதாரிகளைப் போன்று டிப்ளமோ முடித்தவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுவும் அரசுப் பணியில் இடம்பெறுபவர்களுக்கு தனியார் துறையை விட வாய்ப்புகளும், பலன்களும் அதிகம்.

    டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பொறியியல் பட்டதாரிகளைப் போன்று டிப்ளமோ முடித்தவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுவும் அரசுப் பணியில் இடம்பெறுபவர்களுக்கு தனியார் துறையை விட வாய்ப்புகளும், பலன்களும் அதிகம்.

    மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் டிப்ளமோ தகுதியுடையவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மொத்தம் 111 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

    டெக்னீஷியன் - மெக்கானிக்கல் 51 காலியிடங்கள்

    டெக்னீஷியன் - எலக்ட்ரிக்கல் 32 காலியிடங்கள்

    டெக்னீஷியன் - இன்ஸ்ட்ரூமென்டேஷன் 28 காலியடங்கள் என மொத்தம் 111 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - 2774 முதுகலை ஆசிரியர் பணியிடம்: தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி

    கல்வி தகுதியை பொருத்த அளவில் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட டிப்ளமோ பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன், 2 ஆண்டு பணி செய்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

    2022 மார்ச் 1-ம் தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 31 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க - Digital India Corporation Recruitment 2022 : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு

    ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். www.rcfltd.com என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 2022 ஏப்ரல் 4-ம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பக் கட்டணமாக ரூ. 700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விபரங்களை பெற இங்கு க்ளிக் செய்யவும்.
    Published by:Musthak
    First published:

    Tags: Government jobs, Jobs

    அடுத்த செய்தி