ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.45,000 வரை ஊதியம்... பல்வேறு காலி பணியிடங்களை அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்

ரூ.45,000 வரை ஊதியம்... பல்வேறு காலி பணியிடங்களை அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Jobs in Anna University : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், "The Director, Centre for Water Resources, Anna University, Chennai 600025" என்ற முகவரிக்குஅஞ்சல் மூலமாக  அனுப்ப வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்பிரேட்டர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

  கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்வள மையத்தின் ஆலோசனை திட்டமான, "தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல்' பணியின் கீழ் கீழ்வரும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும்  உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  இது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு. அதன்பிறகு, விண்ணப்பதாரின் செயல்திறன் அடிப்படையில் பணிகாலம்  நீட்டிக்கப்படும்.

  இதையும் வாசிக்கதற்காலிக ஒப்பந்தத்தில் வேலை பாக்குறீங்களா? இந்த சட்டம் குறித்து கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், "The Director, Centre for Water Resources, Anna University, Chennai 600025" என்ற முகவரிக்குஅஞ்சல் மூலமாக  அனுப்ப வேண்டும்

  29.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும்.

  மேலும், விவரங்களுக்கு Recruitment For temporary Staff on Daily Wage Basis 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment