அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் டீச்சர் வேலை... 814 பணியிடங்கள்

முதல் நிலையாக ஆன்லைனில் கணினி சார்ந்த தேர்வு,  இரண்டாம் நிலையாக சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.  ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 1:2 என்ற சுழற்சி முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்.

news18
Updated: March 4, 2019, 1:31 PM IST
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் டீச்சர் வேலை...  814 பணியிடங்கள்
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் டீச்சர் வேலை.
news18
Updated: March 4, 2019, 1:31 PM IST
அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர்) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வின் மூலம் மொத்தம் 814 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


யார் விண்ணப்பிக்கலாம்:


இந்தப் பணியிடங்களுக்கு 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கணினி  சார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப் படிப்புடன், B.Ed பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் இல்லாமல்) என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Loading...

எஸ்.சி, எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை: 

முதல் நிலையாக ஆன்லைனில் கணினி சார்ந்த தேர்வு,  இரண்டாம் நிலையாக சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.  ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 1:2 என்ற சுழற்சி முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்.

ஊதியம்:

தேர்வில் தேர்வானவர்களுக்கு  ரூ.36,900 - ரூ. 1,16,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை  (www.trb.tn.nic.in) என்ற  இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தெரிந்துகொள்ள www.trb.tn.nic.in பார்க்கலாம்.

Also Watch: மீண்டும் போர் விமானத்தை இயக்குவாரா அபிநந்தன்?First published: March 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...