Home /News /employment /

ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு - டிகிரி படித்திருந்தால் போதும்

ராமநாதபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு - டிகிரி படித்திருந்தால் போதும்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ராமநாதபுரத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ...

    ராமநாதபுரம் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப் பட உள்ளனர்.

     வேலைவாய்ப்பு:

    பணி: Social worker member

    காலிப்பணியிடங்கள் : 02

    அறிவிப்பு வெளியான நாள் : 07-12-2021

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2021

    தகுதி: குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தைகளின் உளவியல் மனநல மருத்துவம் , சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருந்தால் வேண்டும்.

    வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமத்தின் Social Worker Member பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் இணைந்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.12.2021 -க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பவும்.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

    மாவட்ட ஆட்சியர் வளாகம்

    நீதிமன்றம் தென்புறம்

    இராமநாதபுரம் – 623503

    Social Worker Member பணிக்கான விண்ணப்ப படிவம்

    மேலும் விவரங்களுக்கு https://ramanathapuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment news, Government jobs, Job search, Job Vacancy, Ramanathapuram

    அடுத்த செய்தி