உதவி ஆராய்ச்சி அலுவலர் வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு
உதவி ஆராய்ச்சி அலுவலர் வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு
NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் வேலை
Job Vacancy | விண்ணப்பங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் மற்றும் கல்வி தகுதி , வயது இதர பிறவற்றிற்கு https://www.tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ISMக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தற்காலிக ஈடுபாட்டிற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள 11 உதவி ஆராய்ச்சி அலுவலர் (பல்வேறு பிரிவுகள்) மற்றும் 9 ஆய்வக நுட்புநர்
பணியிடங்களில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.12,000 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் மற்றும் கல்வி தகுதி , வயது இதர பிறவற்றிற்கு https://www.tnhealth.tn.gov.in/என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் “சென்னை – 600106 அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்திலுள்ள
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/இயக்குநர்” அவர்களுக்கு 20.06.2022 அன்று மாலை 5.00 மணிக்கு
முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக
பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.