Home /News /employment /

ரூ.67,700 சம்பளத்தில் புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

ரூ.67,700 சம்பளத்தில் புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

ஜிப்மர்

ஜிப்மர்

ஜிம்பர் பல்கலைக்கழகத்தில் Senior Resident பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி ஜிப்மர் (JIPMER)  பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிம்பர் பல்கலைக்கழகத்தில் Senior Resident பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நிறுவனம்: ஜிப்மர் (JIPMER)

    பணி : Senior Resident

    காலிப்பணியிடங்கள் : 58

    அறிவிப்பு வெளியான நாள் : 24.11.2021

    விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-12-2021

    கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாடின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குறிப்பு: தேர்வுக்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தகுதிக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.  பணிக்கு தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியின் கட்டாயக் காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். இதனை பூர்த்தி செய்யாதவர்கள் விண்ணபிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்ப கட்டணம்:  General, OBC -பிரிவினருக்கு ரூபாய் 1500 விண்ணப்ப கட்டணம், SC/ST பிரிவினருக்கு ரூபாய் 1,200 விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்  14-12-2021-க்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment news, JIPMER, Job search, Job vacancies, Recruitment

    அடுத்த செய்தி