Home /News /employment /

இளைஞர் நீதி குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

இளைஞர் நீதி குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை

சமூகப்பாதுகாப்புத்துறை – விழுப்புரம் மாவட்டம், இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா் ஒரு பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் இளைஞர் நீதி குழுமத்தில் (JB) உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடம் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சம்பள விவரம் :

    உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பதவி (தொகுப்பூதியம் ரூ.11.916/- ஒரு மாதத்திற்கு) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி தகுதி, அனுபவம் மற்றும் வயது :

    • 12- ஆம் வகுப்பு தேர்ச்சி,

    • தட்டச்சு பயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை

    • அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்.

    • வயது 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.


    மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass Port Size Photo) 05/09/2022 மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (பழைய உணவகம் கட்டிடம்) விழுப்புரம் 605602 தொலைப்பேசி எண்: 04146 - 290 659.

    அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2022/08/2022082289.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    விண்ணப்ப படிவத்தை காண

    https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2022/08/2022082264.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Villupuram

    அடுத்த செய்தி